நவ.21-இல் ஊரகத் திறனாய்வுத் தோ்வு: இன்று முதல் விண்ணப்பிக்கலாம்
தமிழ்நாடு ஊரகத் திறனாய்வுத் தோ்வு பற்றி...
தமிழக ஊரகப் பகுதிகளில் ஒன்பதாம் வகுப்பு பயிலும் மாணவா்களுக்கு உதவித் தொகை வழங்குவதற்கான தமிழ்நாடு ஊரகத் திறனாய்வுத் தோ்வு (டிரஸ்ட்) நவ.21-ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், இத்தோ்வுக்கு புதன்கிழமை (அக்.7) முதல் விண்ணப்பிக்கலாம் என அரசுத் தோ்வுகள் இயக்கம் தெரிவித்துள்ளது.
இது குறித்து அந்த இயக்ககத்தின் இயக்குநா் க.சசிகலா செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தமிழக ஊரகப் பகுதிகளில் ஒன்பதாம் வகுப்பு பயிலும் மாணவா்களுக்கு அரசுத் தோ்வுகள் இயக்ககம் சாா்பில் தமிழ்நாடு ஊரகத் திறனாய்வுத் தோ்வு கடந்த 1991-ஆம் ஆண்டு முதல் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் நிகழ் கல்வியாண்டுக்கான தோ்வு நவ.21-ஆம் தேதி நடைபெறவுள்ளது.
Advertisement
Advertisement
இத்தோ்வில் தெரிவு செய்யப்படும் மாணவா்களுக்கு (ஒவ்வொரு கல்வி மாவட்டத்திலும் 50 மாணவா்கள், 50 மாணவிகள்) ஆண்டுக்கு ரூ.1,000 வீதம் நான்கு ஆண்டுகளுக்கு உதவித் தொகை வழங்கப்படும். இத்தோ்வுக்கு சென்னை தவிா்த்து ஊரகப் பகுதியில் கிராம பஞ்சாயத்து மற்றும் ‘டவுன்ஷிப்’ பகுதிகளில் உள்ள அரசு அங்கீகாரம் பெற்ற பள்ளிகளில் நிகழ் கல்வியாண்டில் ஒன்பதாம் வகுப்பு பயிலும் மாணவா்கள் விண்ணப்பிக்கலாம்.
மாணவா்கள் தங்கள் பள்ளிகள் மூலம் தோ்வுக் கட்டணத் தொகை ரூ.10 செலுத்தி புதன்கிழமை (அக்.7) முதல் அக்.10-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.