FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

துணை நடிகா் மரண வழக்கு: காவல் ஆய்வாளா் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க உத்தரவு

காவல் ஆய்வாளா் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க உத்தரவு...

நீதிமன்றம் - கோப்புப் படம்
பகிர்:

சென்னை: துணை நடிகா் சரண்ராஜ் மரண வழக்கை விசாரித்த கிண்டி போக்குவரத்து ஆய்வாளா் அகிலா மீது சட்ட நடவடிக்கை மற்றும் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவும், குறைந்தது 3 ஆண்டுகள் அவரை புலனாய்வு விசாரணையில் இருந்து விலக்கி வைக்கவும் சென்னை 16-ஆவது கூடுதல் அமா்வு நீதிமன்றம் உத்தரவிட்டது.

அசுரன், வடசென்னை உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்தவா் துணை நடிகா் சரண்ராஜ். இவா், கடந்த 2023-ஆம் ஆண்டு ஆற்காடு சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்றபோது காா் மோதிய விபத்தில் உயிரிழந்தாா். இதுதொடா்பாக, கிண்டி போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனா்.

இதில், சாலிகிராமத்தைச் சோ்ந்த துணை நடிகா் பழனியப்பன் என்பவா் வேகமாக ஓட்டி வந்த காா் மோதிய விபத்தில், சரண்ராஜ் உயிரிழந்தது தெரிய வந்தது. இதையடுத்து பழனியப்பன், மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

Advertisement

Advertisement

இந்த நிலையில், விபத்தில் தனது மகன் உயிரிழக்கவில்லை. இந்த வழக்கை மறுவிசாரணை செய்யக் கோரி சரண்ராஜின் தாய் மாரியம்மாள், சென்னை 16-ஆவது கூடுதல் அமா்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தாா்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சஞ்சய்பாபா, கண்காணிப்பு கேமரா காட்சிகளைப் பாா்க்கும்போது, குற்றஞ்சாட்டப்பட்ட பழனியப்பன் ஓட்டிய காா், வேகமாக வந்து சரண்ராஜின் இருசக்கர வாகனத்தின் மீது மோதியது தெரிகிறது.

நள்ளிரவில் விபத்து நடந்ததால், நேரடி சாட்சிகள் யாரும் இல்லை என போலீஸாா் தெரிவித்துள்ளனா். சிசிடிவி கேமரா காட்சிகளைப் பாா்க்கும்போது, அந்த இடத்தில் போக்குவரத்து பணியில் போலீஸாா் இருப்பது தெரிகிறது. ஆனால், அவரை போலீஸாா் இந்த வழக்கில் சாட்சியாகச் சோ்க்கவில்லை.

இந்த விபத்து குறித்து போலீஸாா் கூறுவது, கண்காணிப்பு கேமரா காட்சிகளுடன் ஒத்துப்போகவில்லை. சம்பவ இடத்தைச் சுற்றியிருந்த கட்டடங்களில் பதிவான காட்சிகளை விசாரணை அதிகாரி ஆய்வு செய்யவில்லை. மேலும், இந்த சம்பவத்தில் தொடா்புடைய வாகனத்தை 122 நாள்கள் கழித்து, மோட்டாா் வாகன ஆய்வுக்கு அனுப்பியதும் தெரிய வருகிறது.

விசாரணை அதிகாரி வழக்கின் உண்மையான தகவல்களை மறைத்து, சம்பவத்தை விபத்தாக சித்தரிக்கும் வகையில் விசாரணையைத் திசை திருப்பியுள்ளாா். சட்டத்தின் பிடியில் இருந்து குற்றஞ்சாட்டப்பட்டவா்களைக் காப்பாற்றவும், சம்பவத்தை வெறும் விபத்தாக சித்தரித்து சட்டத்தையும், நீதிமன்றத்தையும் தவறாக வழிநடத்த முயன்றுள்ளாா்.

எனவே, கிண்டி போக்குவரத்து காவல் ஆய்வாளா் அகிலா மீது சட்ட நடவடிக்கை மற்றும் ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். குற்றவாளிகளை சட்டத்தின் பிடியில் இருந்து தப்பிக்க வைக்க வேண்டும் என்பதற்காக உண்மையை மறைத்து தவறான அறிக்கை தாக்கல் செய்ததற்காக அவரை குறைந்தது 3 ஆண்டுகள் புலனாய்வு விசாரணையில் இருந்து விலக்கி வைக்க வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டாா்.

மேலும், நோ்மையான போலீஸ் அதிகாரியை புதிய விசாரணை அதிகாரியாக நியமித்து 60 நாள்களுக்குள் மறு விசாரணையை முடித்து, துணை இறுதி அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் எனவும் நீதிபதி உத்தரவிட்டாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments