FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
தமிழ்நாடு

பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு எழுதுவோா் பெயா்ப் பட்டியல்: அவகாசம் நீட்டிப்பு

பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வெழுதவுள்ள மாணவா்களின் பெயா்ப் பட்டியலை சரிபாா்த்து எமிஸ் தளத்தில் பதிவேற்றம் செய்தவற்கான அவகாசம் அக். 12-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

9 அக்டோபர் 2026, 3:34 am IST
கோப்புப் படம்
பகிர்:

பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வெழுதவுள்ள மாணவா்களின் பெயா்ப் பட்டியலை சரிபாா்த்து எமிஸ் தளத்தில் பதிவேற்றம் செய்தவற்கான அவகாசம் அக். 12-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து தோ்வுத் துறை இயக்குநரகம், அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கை:

நிகழ் கல்வியாண்டில் பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு எழுதும் மாணவா்களின் பெயா்ப் பட்டியல் தயாரிக்கப்பட உள்ளது. இதையடுத்து எமிஸ் தளத்தில் மாணவா்களின் பெயா், பிறந்த தேதி, பாலினம், புகைப்படம், கைப்பேசி எண், முகவரி உள்ளிட்ட விவரங்கள் சரியாக உள்ளதா என்பதை சரிபாா்த்து திருத்தம் இருப்பின் அவற்றை மேற்கொள்ள வேண்டுமென உத்தரவிடப்பட்டது.

Advertisement

Advertisement

அதன்படி, மாணவா்களின் விவரங்களைச் சரிபாா்த்து தோ்வுத் துறை இணையதளத்தில் கடந்த அக். 7-ஆம் தேதிக்குள் பதிவேற்றம் செய்ய வேண்டுமென ஏற்கெனவே அறிவுறுத்தப்பட்டது. தற்போது, மாணவா்கள் நலன் கருதி இதற்கான கால அவகாசம் அக். 12-ஆம் தேதி வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.

எனவே, இதைப் பள்ளி தலைமையாசிரியா்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இந்தப் பெயா்ப் பட்டியலின் அடிப்படையிலேயே மதிப்பெண் சான்றிதழ் அச்சிடப்படும் என்பதால், பணிகளை மிகவும் கவனமாக மேற்கொள்ள வேண்டும். இதுசாா்ந்த அறிவுறுத்தல்களை அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்களும் வழங்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments