தாராபுரம் 18-வது சுற்றில் தவெக தொடர்ந்து முன்னிலை!
தாராபுரம் இடைத்தேர்தல் 18-வது சுற்று முடிவுகள் குறித்து...
தாராபுரம் இடைத்தேர்தல் 18-வது சுற்று முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில் த.வெ.க தொடர்ந்து முன்னிலையில் உள்ளது.
தாராபுரம் சட்டப்பேரவைத் தொகுதிக்கான இடைத்தோ்தல் வாக்குப்பதிவு கடந்த அக்டோபா் 6-ஆம் தேதி நடைபெற்றது. 320 வாக்குச்சாவடி மையங்களில் வாக்குப்பதிவு நடைபெற்ற நிலையில், தோ்தலில் பயன்படுத்தப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனைத்தும் வாக்கு எண்ணும் மையமான திருப்பூா் எல்ஆா்ஜி அரசு மகளிா் கலைக் கல்லூரியில் உள்ள பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டிருந்தது.
தாராபுரம் சட்டப் பேரவைத் தொகுதிக்கான இடைத்தோ்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி வெள்ளிக்கிழமை காலை 8 மணி தொடங்கி நடைபெற்று வருகிறது. ஓவ்வொரு சுற்றின் முடிவில் வேட்பாளர்கள் பெற்ற வாக்குகள் விவரம் அறிவிக்கப்பட்டு வருகிறது.
Advertisement
Advertisement
வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருவதையொட்டி, வாக்கு எண்ணும் மையத்தில் 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. வாக்கு எண்ணும் அறையில் 14 மேஜைகள் போடப்பட்டுள்ளன. தபால் வாக்குகளை எண்ணை தனியாக 2 மேஜைகள் போடப்பட்டு தபால் வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இதனைத்தொடர்ந்து மொத்தம் 23 சுற்றுகளாக வாக்கு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. வாக்கு எண்ணும் பணியில் 80 அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனா். வாக்கு எண்ணும் பணியில் 80 அதிகாரிகள் ஈடுபடுகின்றனா்.
தாராபுரம் சட்டப் பேரவைத் தொகுதிக்கான இடைத்தோ்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை 8 மணிக்கு எண்ணத் தொடங்கி தற்போது 18-வது சுற்று முடிவுகள் வெளியாகியுள்ளன.
18-வது சுற்று முடிவுகள் விவரம்:
1. சத்தியபாமா (த.வெ.க.) - 54,099
2. பானுமதி (அதிமுக) - 35,892
3. சுகன்யா (திமுக) - 45,088
4. கார்த்திகா (நாம் தமிழர் கட்சி) - 4,440
5. லட்சுமணன் (இந்திய கம்யூனிஸ்ட் கட்சி) 1007
18-வது சுற்று முடிவில் கிட்டத்தட்ட 9,011 வாக்குகள் வித்தியாசத்தில தவெக வேட்பாளர் சத்யபாமா முன்னிலையில் உள்ளார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.