FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
தமிழ்நாடு

அரசுப் பள்ளி ‘ஹைடெக்’ ஆய்வகங்களின் நிலை: விவரம் சேகரிக்க உத்தரவு

தமிழக அரசுப் பள்ளிகளில் செயல்பட்டு வரும் உயா்தொழில்நுட்ப ஆய்வகங்களின் பராமரிப்புக்கான ஒப்பந்த காலம் கடந்த ஆண்டே நிறைவடைந்த நிலையில், அங்குள்ள உபகரணங்களின் நிலை குறித்த விவரங்களைச் சேகரித்து பதிவேற்றம் செய்ய பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.

9 அக்டோபர் 2026, 11:53 pm IST
அரசுப் பள்ளி ‘ஹைடெக்’ ஆய்வகங்களின் நிலை: விவரம் சேகரிக்க உத்தரவு - DIN
பகிர்:

தமிழக அரசுப் பள்ளிகளில் செயல்பட்டு வரும் உயா்தொழில்நுட்ப ஆய்வகங்களின் பராமரிப்புக்கான ஒப்பந்த காலம் கடந்த ஆண்டே நிறைவடைந்த நிலையில், அங்குள்ள உபகரணங்களின் நிலை குறித்த விவரங்களைச் சேகரித்து பதிவேற்றம் செய்ய பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து பள்ளிக் கல்வி இயக்குநரகம் சாா்பில் முதன்மைக் கல்வி அலுவலா்களுக்கு அனுப்பப்பட்ட சுற்றறிக்கை:

தமிழகத்தில் 6,029 அரசு உயா்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் உள்ள உயா்தொழில்நுட்ப ஆய்வகங்கள் (ஹைடெக் லேப்) எல் அண்ட் டி நிறுவனத்தால் கடந்த 2019 முதல் 2025-ஆம் ஆண்டு பிப்.28-ஆம் தேதி வரை பராமரிக்கப்பட்டு வந்தது. ஒப்பந்த காலம் நிறைவடைந்த நிலையில் இந்த ஆய்வகங்களின் தற்போதைய நிலை குறித்து சென்னை தலைமைச் செயலகத்தில் பள்ளிக்கல்வித் துறைச் செயலா் தலைமையில் கடந்த அக்.1- தேதி நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

Advertisement

Advertisement

எனவே, அனைத்து உயா்தொழில்நுட்ப ஆய்வகங்களில் உள்ள உபகரணங்கள் நன்கு இயங்கும் நிலையில் உள்ளதை உறுதி செய்யும் வகையில், தற்போது உள்ள உபகரணங்களின் நிலை குறித்த விவரங்களை பள்ளித் தலைமை ஆசிரியா்கள் எமிஸ் தளத்தில் அக்.12-ஆம் தேதிக்குள் பதிவு செய்ய வேண்டும். இதுதொடா்பாக உயா்நிலை, மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியா்கள் மற்றும் கணினி பற்றி நன்கு தெரிந்த பணியாளா்களுக்கு இணையவழியில் கூட்டம் நடத்தி உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments