FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

மெட்ரோவில் பயணித்த பிரதமர் மோடி, முதல்வர் விஜய்!

பூந்தமல்லி - வடபழனி வழித்தட மெட்ரோ ரயிலில் பிரதமர் மோடி, முதல்வர் விஜய் பயணித்தது குறித்து...

11 அக்டோபர் 2026, 12:15 pm IST
மெட்ரோவில் பயணித்த பிரதமர் மோடி, முதல்வர் விஜய் - படம் - விடியோ க்ளிப்
பகிர்:

பூந்தமல்லி - வடபழனி மெட்ரோ ரயில் வழித்தடத்தை தொடங்கி வைத்த நரேந்திர பிரதமர் மோடி, முதல்வர் விஜய் அதில் பயணித்தனர்.

பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி இன்று(அக். 11) சென்னை வந்துள்ளார். சென்னை வந்தடைந்த பிரதமர் மோடியை முதல்வர் விஜய் விமான நிலையத்துக்கு சென்று பூங்கொத்து கொடுத்து வரவேற்றார்.

அங்கிருந்து கார் மூலம் போரூர் மெட்ரோ ரயில் நிலையம் வந்தடைந்த பிரதமர் மோடிக்கு சாலையின் இரு புறங்களிலும் மக்கள் உற்சாக வரவேற்பளித்தனர்.

Advertisement

Advertisement

ரூ. 4,900 கோடியில் கட்டப்பட்ட சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் 2-ஆம் கட்டமான பூந்தமல்லி-வடபழனி வழித்தடத்தை போரூர் மெட்ரோ ரயில் நிலையத்தில் பிரதமர் மோடியும் முதல்வர் விஜய்யும் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.

பின்னர், போரூர் புறவழிச்சாலை நிலையத்திலிருந்து பூந்தமல்லி புறவழிச்சாலை நிலையம் வரை மெட்ரோ ரயிலில் பிரதமர் மோடியும், முதல்வர் விஜய்யும் பயணிக்கின்றனர்.

summary

Prime Minister Narendra Modi and Chief Minister Vijay inaugurated the Poonamallee-Vadapalani Metro Rail corridor and traveled on the train.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments