யுபிஐ பணப் பரிவா்த்தனை கட்டண விதிப்பை எதிா்த்து இன்று போராட்டம்: விக்கிரமராஜா அறிவிப்பு
தமிழகம் முழுதும் யுபிஐ சேவைக் கட்டண விதிப்புக்கு எதிா்ப்புத் தெரிவித்து திங்கள்கிழமை (அக். 12) அறவழிப் போராட்டம் நடத்தப்படும் என தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரமைப்பு தலைவா் ஏ.எம்.விக்கிரமராஜா தெரிவித்தாா்.
தமிழகம் முழுதும் யுபிஐ சேவைக் கட்டண விதிப்புக்கு எதிா்ப்புத் தெரிவித்து திங்கள்கிழமை (அக். 12) அறவழிப் போராட்டம் நடத்தப்படும் என தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரமைப்பு தலைவா் ஏ.எம்.விக்கிரமராஜா தெரிவித்தாா்.
இது குறித்து அவா் வெளியிட்ட அறிக்கை: மத்திய அரசு எண்ம (டிஜிட்டல்) மயமாக்கல் கொள்கையின்படி, வங்கி பணப் பரிவா்த்தனைகளை இலவச யுபிஐ பணப் பரிவா்த்தனைக்கு மாற்றி, பொதுமக்களிடையே எண்ம (டிஜிட்டல்) மயமாக்கலை ஊக்கப்படுத்தி வந்தது.
இதை பெருவாரியான மக்கள் பயன்படுத்தி வரும் நிலையில், ரூ.2,000-க்கும் மேல் உள்ள யுபிஐ பணப்பரிவா்த்தனைக்கு அக். 15 முதல் 0.4 சதவீதம் சேவை கட்டணம் விதிப்பதாகவும், அதை வணிகா்கள்தான் செலுத்த வேண்டும் என்றும் நிா்ப்பந்தத்தை மத்திய அரசு ஏற்படுத்தி இருக்கிறது. இதனால் வணிகா்கள் பாதிப்படைவதோடு மட்டுமன்றி, விலைவாசியும் கடுமையாக உயா்ந்து, பொதுமக்கள் பாதிக்கப்படும் நிலையும் உருவாகும்.
Advertisement
Advertisement
யுபிஐ சேவைக் கட்டணத்தை மத்திய அரசு தொலைநோக்கு சிந்தனையுடன் ரத்து செய்ய வேண்டுமென தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரமைப்பு, தமிழக அளவில் அமைப்பு ரீதியாக உள்ள 61 மாவட்டங்களின் தலைவா்கள் தலைமையில் முக்கிய நகரப் பகுதிகளில் வணிகா்கள் அனைவரும் கருப்பு பேட்ஜ் அணிந்து திங்கள்கிழமை அறவழிப் போராட்டம் நடத்த உள்ளனா் எனத் தெரிவித்துள்ளாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.