FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

சிதம்பரம் ஸ்ரீ நடராஜர் கோயிலில் பிரம்மாண்ட கொலு!

சிதம்பரம் ஸ்ரீ நடராஜர் கோயிலில் நவராத்திரி கொலு பற்றி..

12 அக்டோபர் 2026, 1:50 pm IST
சிதம்பரம் ஸ்ரீ நடராஜர் கோயில் கொலு
பகிர்:

சிதம்பரம் ஸ்ரீ நடராஜர் கோயிலில் நவராத்திரியை முன்னிட்டு 21 அடி உயரத்தில் பிரமாண்டமான கொலு நவராத்திரி தொடக்கத் தினமான ஞாயிற்றுக்கிழமை இரவு தொடங்கியது.

கடலூர் மாவட்டம் சிதம்பரம் ஸ்ரீ நடராஜர் கோயிலில் கல்யாண மண்டபத்தில் நவராத்திரி கொலு உற்சவத்தை முன்னிட்டு 21 படி உயரத்தில் 21 அடி அகலத்தில் 21 படிகளுடன் பிரமாண்டமான கொலு அமைக்கப்பட்டுள்ளது.

அக்.11-ம் தேதி தொடங்கிய இந்த கொலு வருகிற அக்.19-ம் தேதி வரை நடைபெறுகிறது. ஒன்பது நாள்களும் இரவு 9 மணிக்கு கொலு அமைக்கப்பட்டுள்ள இடத்திற்கு முன்பு உள்ள வெள்ளி ஊஞ்சலில் ஸ்ரீ சிவகாமசுந்தரி அம்பாளான, நவராத்திரி அம்மனுக்கு ஊஞ்சல் உற்சவமும், தீபாராதனையும் நடைபெறும்.

Advertisement

Advertisement

கொலுவில் ஸ்ரீ நடராஜர் முதல் சிறிய பொம்மைகள் வரை சுமார் 4 ஆயிரத்திற்கும் மேலான பொம்மைகள் வைக்கப்பட்டுள்ளன. பிரம்மாண்டமான கொலுவினை திரளான மக்கள் வந்து பார்த்து வணங்கிச் செல்கின்றனர்.

நவராத்திரி கொலு குறித்து உ. வெங்கடேச தீட்சிதர் தெரிவித்தது..

சாரதா நவராத்திரியில் ஒரறிவு முதல் ஆறறிவு மனிதன் வரை உள்ள உயிரினங்களின் பரினாம வளர்ச்சிகளை வணங்கும் வன்னம் இந்த கொலு வைத்து வணங்கப்படுகிறது எனத் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments