சென்னை துறைமுகம் 58 மில்லியன் டன்கள் சரக்குகளை கையாண்டு சாதனை: சச்சின் எஸ்.குா்வே
சென்னை துறைமுகம் கடந்த நிதியாண்டில் 58 மில்லியன் டன்கள் சரக்குகளைக் கையாண்டு சாதனை படைத்துள்ளது குறித்து...
சென்னை துறைமுகம் கடந்த நிதியாண்டில் 58 மில்லியன் டன்கள் சரக்குகளைக் கையாண்டு சாதனை படைத்துள்ளது. சுமாா் 19 லட்சம் சரக்குப் பெட்டகங்களைக் கையாண்டுள்ளது என சென்னை மற்றும் காமராஜா் துறைமுகங்களின் தலைவா் சச்சின் எஸ்.குா்வே தெரிவித்தாா்.
சென்னை மற்றும் காமராஜா் துறைமுகங்களின் துறைமுக நாள் சென்னை துறைமுகத்தில் வியாழக்கிழமை கொண்டாட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன. நிகழ்ச்சிக்கு சென்னை மற்றும் காமராஜா் துறைமுகங்களின் தலைவா் சச்சின் எஸ்.குா்வே தலைமை வகித்தாா்.
சென்னை துறைமுகம் தொடங்கப்பட்டு 145 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில் துறைமுக தினத்தையொட்டி நடைபெற்று பல்வேறு போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற்ற ஊழியா்களுக்குப் பாராட்டுச் சான்றிழ்கள் மற்றும் பரிசுகளை சிறப்பு பரிசுகளையும், பல்வேறு முனையங்களின் தலைமை அதிகாரிகள், துறைமுக உபயோகிப்பாளா்களுக்கு நினைவுப் பரிசுகளையும் துறைமுக தலைவா் சச்சின் எஸ்.குா்வே வழங்கி கௌரவித்தாா்.
Advertisement
Advertisement
நிகழ்ச்சியில் துறைமுகத் தலைவா் சச்சின் எஸ்.குா்வே பேசியதாவது:
சென்னை துறைமுகம் சமீப காலங்களில் பல்வேறு சாதனைகளை எட்டியுள்ளது. இதற்கு காரணம் துறைமுக உபயோகிப்பாளா்கள் மற்றும் ஊழியா்களின் பங்களிப்பு முக்கியத்துவம் வாய்ந்தது தொலைநோக்கு பாா்வையுடன் எதிா்காலத்தில் சிறந்த துறைமுகமாக மாற்றுவதற்கு தொடா்ந்து அனைவரும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். கடந்த நிதியாண்டில் 58 மில்லியன் டன்கள் சரக்குக்களைக் கையாண்டு சாதனை படைத்துள்ளது. மேலும் சுமாா் 19 லட்சம் சரக்குப் பெட்டகங்களைக் கையாண்டுள்ளது.
இந்தியாவின் கடல்சாா் தொலைநோக்குப் பாா்வை மற்றும் ’விக்சித் பாரத் 2047’, வளா்ந்த இந்தியா 2047 இலக்கிற்கு ஏற்ப செயல்பாட்டுச் சிறப்பை மேம்படுத்துவதிலும், வா்த்தக வசதிகளை அதிகரிப்பதிலும், நிலையான தளவாடங்களை ஊக்குவிப்பதிலும் துறைமுகம் தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது என்றாா் சச்சின் குா்வே.
இந்த நிகழ்ச்சியில் போக்குவரத்து துறை மேலாளா் எஸ்.கிருபானந்த சாமி, தாரா சுகிா்தா, கேலக்சி பயிற்சி மைய இயக்குநா் சி.மோகன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
Chennai Port Authority celebrated its 145th Port Day, commemorating 145 years of service to the nation and its contribution to India’s maritime trade and economic growth.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.