14 படங்கள், ஆனால் 10 நிமிடம்தான் பேசியிருப்போம்! முதல்வர் விஜய் பற்றி தேவா கூறியது...
முதல்வர் விஜய் பற்றி இசையமைப்பாளர் தேவா கூறியது பற்றி...
தனியார் ஊடக நிகழ்ச்சியில் முதல்வர் விஜய் பற்றி இசையமைப்பாளர் தேவா பேசிய விடியோ இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.
அந்த நிகழ்ச்சியில் தேவா பேசும்போது,
"முதல்வர் விஜய்யின் 14 படங்களுக்கு இசையமைத்திருக்கிறேன். இந்த 14 படங்களில் நான் அவருடன் பேசியது ஒரு 10 நிமிடங்கள்கூட இருக்காது. அவர் உண்டு, அவர் வேலை உண்டு என்று இருப்பார்.
Advertisement
Advertisement
முதல் படத்தில் இருந்து அவர் நன்றாகப் பாடுவார் என்று தெரிந்து 'ரசிகன்' திரைப்படத்தில் 'பம்பாய் சிட்டி சுல்தான் ரொட்டி...' பாட்டு அவருக்கு சொல்லிக் கொடுத்து அவர் பாடி அது ஹிட் ஆகிவிட்டது. அதன்பிறகு அவர் படத்திற்கு எல்லாம் அவர் பாடுவார். அவர் மென்மையான மனிதர். பெருந்தன்மையானவர், அளவாக பேசுவார்.
அவர் முதல்வர் ஆகியிருப்பது எனக்கு ரொம்ப பெருமையாக இருக்கிறது. அவருக்கு பாட்டு சொல்லிக் கொடுத்து ரெக்கார்டிங் செய்து... இன்று அவர் முதல்வராக இருப்பது சந்தோஷம். இந்த நேரத்தில் அவருக்கு என்னுடைய வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று பேசினார்.
விஜய் படங்கள்...
நடிகர் விஜய்யின் ரசிகன், விஷ்ணு, மாண்புமிகு மாணவன், ஒன்ஸ்மோர், நேருக்கு நேர், ப்ரியமுடன், நினைத்தேன் வந்தாய், மின்சார கண்ணா, குஷி, பகவதி உள்ளிட்ட படங்களுக்கு இசையமைத்துள்ளார் தேவா.
'தொட்டபெட்டா ரோட்டு மேல', 'ஊட்டி மலை பியூட்டி, 'வண்ண நிலவே', மல்லிகையே மல்லிகையே, 'பாரதிக்கு கண்ணம்மா', 'ஊதா ஊதா பூ' மற்றும் 'குஷி', 'பகவதி' படங்களில் பல வெற்றி பாடல்களை கொடுத்தவர். இதில் பல பாடல்களை விஜய் பாடியுள்ளது குறிப்பிடத்தக்கது.
Music director Deva spoken about CM vijay in function
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.