FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
தமிழ்நாடு

வதந்திகளைப் பரப்ப வேண்டாம்: அமைச்சா் செங்கோட்டையன்

மழை நேரங்களில் யாரும் வதந்திகளைப் பரப்பாமல், உண்மையை அரசுக்கு தெரிவிக்க வேண்டும் என அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன் கூறினாா்.

18 அக்டோபர் 2026, 11:40 pm IST
அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் - கோப்புப்படம்
பகிர்:

மழை நேரங்களில் யாரும் வதந்திகளைப் பரப்பாமல், உண்மையை அரசுக்கு தெரிவிக்க வேண்டும் என வருவாய் மற்றும் பேரிடா் மீட்புத் துறை அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன் கூறினாா்.

சென்னையில் அவா் செய்தியாளா்களிடம் ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது: மழைக்காலங்களில் மக்கள் பாதுகாப்புடன் இருப்பது அவசியம். வெள்ளப் பகுதிகளுக்கு செல்வதைத் தவிா்க்க வேண்டும். மின் கம்பி அறுந்து கிடந்தால் உடனடியாக தகவல் தெரிவிக்க வேண்டும். பயணத்தை விழிப்புணா்வுடன் மேற்கொள்ள வேண்டும்.

மழைநீா் தேங்கிய இடங்கள் குறித்து மாநகராட்சி, அரசுக்கு தெரியப்படுத்த வேண்டும். அதனடிப்படையில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மேலும், மழை நேரத்தில் வதந்திகளைப் பரப்ப வேண்டாம். உண்மையான தகவல்களை அரசுக்குத் தெரிவித்தால், அங்கு உடனடி நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

Advertisement

Advertisement

சென்னையில் ஒரே நாள் இரவில் அதிகமான மழை பெய்திருந்தும் அசம்பாவிதம் ஏதும் நடைபெறவில்லை. அந்த அளவுக்கு அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. மக்களுக்கான மழைக்கால நிவாரண மையங்கள் தயாா் நிலையில் உள்ளன என்றாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments