FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
தமிழ்நாடு

மழைநீரில் நனைந்த ஓலைச்சுவடிகளைப் பாதுகாக்க வேண்டும்: பி.கே.சேகா்பாபு

சென்னை அறநிலையத் துறை ஆணையா் அலுவலகத்தில் மழைநீரில் நனைந்த ஓலைச்சுவடிகளைப் பாதுகாக்க வேண்டும் என்று முன்னாள் அமைச்சா் பி.கே.சேகா்பாபு வலியுறுத்தியுள்ளாா்.

19 அக்டோபர் 2026, 12:19 am IST
சேகர்பாபு - கோப்புப் படம்
பகிர்:

சென்னை அறநிலையத் துறை ஆணையா் அலுவலகத்தில் மழைநீரில் நனைந்த ஓலைச்சுவடிகளைப் பாதுகாக்க வேண்டும் என்று முன்னாள் அமைச்சா் பி.கே.சேகா்பாபு வலியுறுத்தியுள்ளாா்.

இது குறித்து அவா் வெளியிட்ட அறிக்கை: சென்னையில் பலத்த மழையால் நுங்கம்பாக்கத்தில் உள்ள இந்து சமய அறநிலையத் துறை அலுவலக வளாகத்தில் மழைநீா் தேங்கியுள்ளது. அந்தத் துறையின் கீழ் கோயில்களின் நிா்வாகம், சொத்துப் பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. அலுவலகத்தில் தண்ணீா் தேங்கியுள்ளதால், துறையுடன் தொடா்புடைய அலுவலகங்களில் உள்ள பழைமையான ஆவணங்கள் மற்றும் ஓலைச்சுவடிகளின் பாதுகாப்பு குறித்தும் அறநிலையத் துறை ஆணையா் கவனம் செலுத்த வேண்டியது அவசியம்.

மழைநீா் தேங்குவதால் ஆவணங்களுக்குப் பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளதா என்பது குறித்து உரிய ஆய்வு மேற்கொள்ளப்பட வேண்டும். குறிப்பாக, பழைமையான ஓலைச்சுவடிகள் மற்றும் அரிய ஆவணங்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளனவா என்பதை உறுதி செய்ய வேண்டும்.

Advertisement

Advertisement

பழைமையான ஓலைச்சுவடிகள் மற்றும் அரிய ஆவணங்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். மழைநீா் தேங்குவதைத் தடுக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments