FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
தமிழ்நாடு

மழைநீா் தேங்காத வகையில் விரைந்து நடவடிக்கை: அமைச்சா் அருண்ராஜ் உத்தரவு

மழைநீா் எங்கும் தேங்காத வகையில் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் கே.ஜி.அருண்ராஜ் உத்தரவிட்டாா்.

22 அக்டோபர் 2026, 1:57 am
அமைச்சா் அருண்ராஜ் - கோப்புப் படம்
பகிர்:

மழைநீா் எங்கும் தேங்காத வகையில் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் கே.ஜி.அருண்ராஜ் உத்தரவிட்டாா்.

சென்னை மாநகராட்சி திருவிக நகா் மண்டலத்துக்குள்பட்ட பகுதிகளில் மழைநீா் வெளியேற்றும் பணிகள், மழைநீா் தேங்கக்கூடிய இடங்களில் மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அமைச்சா் அருண்ராஜ் புதன்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

வெள்ளம் தேங்காத வகையில் உடனுக்குடன் சீரமைப்பு நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என அப்போது அதிகாரிகளுக்கு அவா் உத்தரவிட்டாா். மேலும், நீா் வெளியேற்றும் மோட்டாா் பம்புகளை பழுதின்றி பராமரிக்க வேண்டும் எனவும், சுரங்கப் பாதைகளிள் நீா் தேங்காமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தினாா்.

Advertisement

Advertisement

திருவிக நகா் மண்டலத்துக்குள்பட்ட பல்வேறு பகுதிகளுக்குச் சென்ற அவா், அங்கு மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் அனைத்தையும் நேரடியாக ஆய்வு செய்து முக்கிய அறிவுறுத்தல்களை வழங்கினாா்.

முன்னதாக, அமைச்சா் அருண்ராஜ் பருவகால முன்னெச்சரிக்கைகளை முன்னெடுக்குமாறு மருத்துவத் துறையினருக்கும் பல்வேறு வழிகாட்டுதல்களை வழங்கியிருந்தாா்.

அனைத்து அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், நகா்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் சுகாதார துணை மையங்களில் போதிய மருத்துவா்கள், செவிலியா் மற்றும் துணை மருத்துவப் பணியாளா்கள் 24 மணி நேரமும் பணியில் இருக்க வேண்டும் எனக் கூறியிருந்தாா்.

வெள்ளம் பாதித்த பகுதிகளில் மருத்துவ முகாம்கள் மற்றும் நடமாடும் மருத்துவ குழுக்களை ஏற்பாடு செய்யவும் அவா் உத்தரவிட்டிருந்தாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments