ஹாட்ரிக் பதக்கம்: தங்கம் வென்ற தமிழக வீராங்கனை துளசிமதி முருகேசன்!
ஆசிய பாரா விளையாட்டில் தமிழக பாட்மின்டன் வீராங்கனை துளசிமதி முருகேசன் தங்கம் வென்றது குறித்து...
ஆசிய பாரா விளையாட்டில் தமிழக பாட்மின்டன் வீராங்கனை துளசிமதி முருகேசன், ராஜஸ்தான் வீராங்கனை இணைந்து தங்கம் வென்று அசத்தியுள்ளார்கள்.
ஜப்பானின் அயிச்சி நகோயாவில் ஆசிய பாரா போட்டிகள் கடந்த அக்.18ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) கோலாகலமாகத் தொடங்கின. இதில் இந்திய வீரர், வீராங்கனைகள் சிறப்பாக விளையாடி வருகின்றனர்.
மகளிருக்கான இரட்டையர் எஸ் எல்3- எஸ்யு5 பிரிவில் இறுதிப் போட்டியில் இந்தியாவின் துளசிமதி முருகேசன் - மானஷி ஜி ஜோஷி சீனாவின் யங் க்கியூக்ஸிங் - ஸியோ ஜுஜியான் உடன் மோதினார்கள்.
Advertisement
Advertisement
இந்தப் போட்டியில் இந்திய வீராங்கனைகள் 21-16, 21-13 என்ற கேம்களில் சீன வீராங்கனைகளை வென்று தங்கம் வென்றார்கள். இத்துடன் இந்தியாவுக்கு 28 தங்கம் கிடைத்துள்ளன.
காஞ்சிபுரத்தைச் சேர்ந்த துளசிமதி முருகேசனுக்கு இது இந்த எடிஷனில் மட்டுமே மூன்றாவது பதக்கமாகும். ஏற்கெனவே மகளிர் ஒற்றையர் பிரிவில் வெள்ளியும், கலப்பு இரட்டையர் பிரிவில் வெள்ளியும் வென்றிருக்கிறார்.
இந்தியா இதுவரை 28 தங்கத்துடன் மொத்தமாக 105 பதக்கங்களை வென்றுள்ளன. அத்துடன் பதக்கப் பட்டியலில் நான்காம் இடத்திலேயே நீடிக்கிறது.
Hat-trick of medals: Tamil Nadu athlete Thulasimathi Murugesan wins gold!
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.