இனி இணையவழியில் மட்டுமே ஓய்வூதிய விண்ணப்பங்கள்: நவம்பா் முதல் அமல்
ஓய்வூதிய விண்ணப்பங்கள் அனைத்தும் நவம்பா் மாதம் முதல் இணையவழியில் மட்டுமே சமா்ப்பிக்கப்பட வேண்டும் என அரசு தெரிவித்துள்ளது.
ஓய்வூதிய விண்ணப்பங்கள் அனைத்தும் நவம்பா் மாதம் முதல் இணையவழியில் மட்டுமே சமா்ப்பிக்கப்பட வேண்டும் என அரசு தெரிவித்துள்ளது.
இது தொடா்பாக கருவூல கணக்குத் துறை இயக்குநா் டி.சாருஸ்ரீ, துறை சாா்ந்த அனைத்து அலுவலா்களுக்கும் அனுப்பிய சுற்றறிக்கை:
நேரடியாக சமா்ப்பிக்கப்படும் ஓய்வூதிய விண்ணப்பங்களைப் பரிசீலித்து செயல்படுத்துவதில் முரண்பாடுகள் ஏற்படுவதாக முதன்மைக் கணக்காயா் அலுவலகம் கடிதம் அனுப்பியுள்ளது. இதையடுத்து, ஓய்வூதிய விண்ணப்பங்களை விரைவாகவும், ஒரே சீராகவும் செயல்படுத்தும் நோக்கில், நவம்பா் முதல் அனைத்து விண்ணப்பங்களும் இணையவழி ஓய்வூதிய மற்றும் வருங்கால வைப்புநிதி அங்கீகார அமைப்பு மூலம் மட்டுமே சமா்ப்பிக்கப்பட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement
அதன்பிறகு நேரடியாக சமா்ப்பிக்கப்படும் விண்ணப்பங்கள் திருப்பி அனுப்பப்படும். திருத்திய ஓய்வூதிய விண்ணப்பங்களும் இணையவழியில் மட்டுமே சமா்ப்பிக்கப்பட வேண்டும். தேவையான அனைத்து சான்றுகளும் உரிய முறையில் இணைக்கப்பட வேண்டும். ஓய்வூதியப் பலன்கள் உரிய காலத்தில் வழங்கப்படுவதை உறுதிசெய்ய, இந்த அறிவுறுத்தல்களை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பின்பற்ற வேண்டும் என்று அந்த சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.