புயல் பாதிப்பு அறிக்கைக்குப் பின் நிவாரணம்! முதல்வர் ரங்கசாமி உறுதி!
புயல் பாதிப்பு நிவாரணம் குறித்து முதலவர் ரங்கசாமி...
புதுச்சேரி ஏனாமில் புயல் பாதிப்பு நிவாரணம் குறித்த அறிக்கை வந்த பின் நிவாரணம் குறித்த நடவடிக்கை எடுத்து அறிவிக்கப்படும் என முதலமைச்சர் ரங்கசாமி தெரிவித்தார்.
புதுச்சேரியில் ஏனாம் புயல் பாதிப்பு குறித்து செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர் ரங்கசாமி,
புதுச்சேரி ஏனாமில் புயல் பாதிப்புகள் குறித்த அறிக்கை வந்த பிறகு, அது தொடர்பாக தகுந்த முடிவெடுக்கப்பட்டுப் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய நிவாரணம் வழங்கப்படும். பொதுப்பணித்துறை அமைச்சர் மற்றும் அந்தந்த பகுதியைச் சேர்ந்த அதிகாரிகள் அனைவரும் புயல் பாதிப்பு நிலவும் பகுதிகளுக்கு நேரில் சென்று கள ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
Advertisement
Advertisement
பாதிக்கப்பட்ட மக்களைப் பாதுகாப்பான இடங்களில் தங்க வைப்பது, அவர்களுக்குத் தேவையான உணவு வழங்குவது உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளையும் அதிகாரிகள் தொடர்ந்து செய்து கொடுத்து வருகிறார்கள். பாதுகாப்புகள் குறித்த கணக்கெடுப்பு வந்த பிறகு நிவாரணம் அறிவிக்கப்படும் என முதலமைச்சர் ரங்கசாமி தெரிவித்தார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.