அஇபுதமமுக-விலிருந்து சசிகலா அதிரடி நீக்கம்: கட்சித் தலைவர் அறிவிப்பு!
அஇபுதமமுக-விலிருந்து வி.கே. சசிகலாவை நீக்குவதாக அக்கட்சியின் நிறுவனத் தலைவர் சக்கரவர்த்தி அறிவித்துள்ளதைப் பற்றி...
அனைத்திந்திய புரட்சித் தலைவர் மக்கள் முன்னேற்றக் கழகத்தில் இருந்து வி.கே. சசிகலாவை நீக்குவதாக அக்கட்சியின் நிறுவனத் தலைவர் சக்கரவர்த்தி அறிவித்துள்ளார்.
சென்னை வளசரவாக்கத்தில் உள்ள அஇபுதமமுக-வின் தலைமை அலுவலகத்தில் கட்சியின் நிறுவனர் சக்கரவர்த்தி புதன்கிழமை செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது அவர் பேசுகையில், “தமிழக அரசையும் தற்போதைய ஆட்சியையும் கண்டித்து இரண்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
Advertisement
Advertisement
மேலும், கடந்த 2026 ஆம் ஆண்டு கட்சியின் பொதுச் செயலராகப் பொறுப்பேற்ற சசிகலா, தேர்தல் முடிவடைந்த பின்னர் கட்சிப் பணிகளில் ஈடுபடவில்லை. அவரைத் தொடர்புகொண்டு சந்திக்க முடியவில்லை. இதனால், சசிகலாவை பொதுச் செயலர் பொறுப்பிலிருந்து நீக்கப்படுகிறார்” எனத் தெரிவித்தார்.
இதுதொடர்பாகத் தேர்தல் ஆணையத்திற்கும் கடிதம் அனுப்பியுள்ளதாகக் குறிப்பிட்ட சக்கரவர்த்தி, வரும் பிப்ரவரி மாதம் நடைபெறவுள்ள கட்சியின் பொதுக்குழுக் கூட்டத்தில் சசிகலாவின் நீக்கம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
மேலும், கட்சியின் செயல்பாடுகளைத் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்ல புதிய பொதுச்செயலர் விரைவில் நியமிக்கப்படுவார் என்றும் சக்கரவர்த்தி தெரிவித்தார்.
Chakravarthy, the founder of the All India Revolutionary Leader People's Progress Federation (Anaithindia Puratchi Thalaivar Makkal Munnetra Kazhagam), has announced the expulsion of V.K. Sasikala from the party.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.