FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

கும்பகோணம் சாரங்கபாணி சுவாமி திருக்கோயிலில் திருப்பணிகள் தொடக்கம்!

கும்பகோணத்தில் உள்ள சாரங்கபாணி சுவாமி திருக்கோயிலில் திருப்பணிகள் தொடங்கியது குறித்து...

42 வினாடிகள் முன்பு
கும்பகோணம் சாரங்கபாணி கோயில் உற்சவர் - file photo
பகிர்:

மூன்று கோடி மதிப்பில் சாரங்கபாணி திருக்கோயிலில் திருப்பணிகள் இன்று தொடங்கியது, திருப்பணியை வேளாண் துறை அமைச்சர் வினோத் பங்கேற்று தொடங்கி வைத்தார்.

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் வைணவ திருத்தலங்களில் திருப்பதி, ஸ்ரீரங்கத்திற்கு அடுத்தபடியாக மூன்றாவது பெரிய திவ்ய தேசமாக விளங்கும் கும்பகோணம் சாரங்கபாணி சுவாமி கோயிலாகும்.

இந்த கோயிலில் 3 கோடி ரூபாய் மதிப்பில் இன்று திருப்பணி துவங்கியது. இன்னும் ஒன்றரை ஆண்டுகளில் கும்பகோணத்தில் மகாமக திருவிழா நடைபெற உள்ளது.

Advertisement

Advertisement

இதனை முன்னிட்டு மகாமக விழா தொடர்புடைய 12 சிவாலயங்கள், ஐந்து வைணவ ஆலயங்களில் குடமுழுக்கு விழா நடைபெற உள்ளது.

அண்மையல் ஆதி கும்பேஸ்வரர் கோயில் குடமுழுக்கு விழா நடைபெற்றது. அந்த கோயிலை தவிர மற்ற கோயில்களில் குடமுழுக்கு விழா நடைபெற உள்ளது.

மகாமக விழா தொடர்புடைய வைணவ கோயில்களில் ஒன்றான சாரங்கபாணி சுவாமி கோயிலில் திருப்பணி தொடக்கமாக இன்று இந்த கோயிலில் பாலாலயம் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் வேளாண் துறை அமைச்சர் வினோத் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். மூன்று கோடி ரூபாய் மதிப்பில் திருப்பணி செய்ய திட்டமிடப்பட்டுள்ள திருக்குடந்தை சாரங்கபாணி சுவாமி கோயிலில், ஓராண்டுக்குள் திருப்பணிகள் நிறைவு பெற்று குடமுழுக்கு விழா நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments