‘தமிழர் ஒருவர் நிச்சயம் பிரதமர் ஆவார்’ - குடியரசு துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன்
தமிழர் ஒருவர் நிச்சயம் பிரதமர் ஆவார் என்று குடியரசு துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளதைப் பற்றி...
தமிழர் ஒருவர் நிச்சயம் பிரதமர் ஆவார் என்று குடியரசு துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
பசும்பொன்னில் நடைபெறும் தேவர் ஜெயந்தி விழாவில் பங்கேற்க குடியரசு துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் இன்று (அக். 30) காலை மதுரை வந்தார். அங்கு முத்துராமலிங்கத் தேவர் உருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதைத் தொடர்ந்து, இன்று மாலை 5.30 மணியளவில் மீனாட்சி அம்மன் கோயிலில் தரிசனம் செய்வதற்காக காரில் வருகை தந்தார். அதன்பின்னர், மீனாட்சி அம்மன் கோயிலில் சாமி தரிசனம் செய்தார்.
செய்தியாளர்களைச் சந்தித்த குடியரசு துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் பேசுகையில், “மதுரை மீனாட்சி அருள் எல்லோருக்கும் கிடைக்க வேண்டும். அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துகள். ஒரு தமிழர் பிரதமர் ஆவதற்கு நிச்சயம் வாய்ப்பு இருக்கிறது.
Advertisement
Advertisement
ஒரு கன்னடர், குஜராத்தை சேர்ந்தவர் பிரதமராக ஆகும்போது தமிழரும் பிரதமர் ஆகலாம். ஜனநாயக நாட்டில் எல்லோருக்கும் வாய்ப்பு இருக்கிறது. இந்தியா வல்லரசு ஆவதை உலகின் எந்த சக்தியாலும் தடுக்க முடியாது.
மகத்தான நாடாக, எல்லோருக்கும் வழிகாட்டும் நாடாக இந்தியா உருவாகும். 15 ஆண்டுகளுக்கு முன்பு இந்தியா வல்லரசு ஆகும் என கூறினால் நம்பிக்கை இருக்காது. ஆனால், இப்போது இந்தியா வல்லரசு ஆகும் என சொன்னால் மக்களுக்கு நம்புவார்கள்.
அதே நம்பிக்கை தான் உலகின் நான்காவது வல்லரசாக இந்தியாவை உருவாக்கியுள்ளது. நிச்சயம் உலகின் முதல் வல்லரசு நாடாக இந்தியா மாறும்” எனத் தெரிவித்தார்.
Vice President C.P. Radhakrishnan has stated that a Tamil person will definitely become the Prime Minister.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.