முன்னாள் முதல்வருக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பில் எந்தக் குறைபாடும் இல்லை– அமைச்சர் நிர்மல் குமார்
முன்னாள் முதல்வருக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பில் எந்தக் குறைபாடும் இல்லை என்று அமைச்சர் நிர்மல் குமார் தெரிவித்திருப்பது பற்றி....
முன்னாள் முதல்வருக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பில் எந்தக் குறைபாடும் இல்லை என்று அமைச்சர் நிர்மல் குமார் தெரிவித்தார்.
மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், கோரிப்பாளையம் பகுதியில் முன்னாள் முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமிக்கு பாதுகாப்பு குறைபாடு ஏற்பட்டதாக எழுப்பப்பட்ட கேள்விக்கு, அனைவருக்கும் என்ன பாதுகாப்பு வழங்கப்பட்டதோ அதே பாதுகாப்புதான் முன்னாள் முதல்வருக்கும் வழங்கப்பட்டது. இதில் எந்தவிதமான கட்டுப்பாடுகளும் விதிக்கப்படவில்லை. மாலை வரை அதே பாதுகாப்பு நடைமுறையில் இருந்தது என்றார்.
மின்வெட்டு தொடர்பாக அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார், மின்சாரத்துறை அமைச்சர் பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தியது குறித்த கேள்விக்கு, எங்கெல்லாம் குறைகள் உள்ளனவோ அவற்றைச் சரிசெய்து வருகிறோம் என்று பதிலளித்தார்.
Advertisement
Advertisement
மின்வெட்டுக்குக் காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா என்ற கேள்விக்கு, விசாரணை நடத்தி எங்கு குறைகள் உள்ளன என்பதைக் கண்டறிந்து அவற்றைச் சரிசெய்ய முயற்சி மேற்கொள்ளப்படும் என்றார்.
குடியரசு துணைத் தலைவர் தமிழர் ஒருவர் பிரதமராக முடியும் என்று கூறியது குறித்த கேள்விக்கு, அவர் என்ன நோக்கத்தில் அவ்வாறு கூறினார் என்பது தெரியாது என்று பதிலளித்தார்.
மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் நேற்று குடியரசு துணைத் தலைவர் வருகையை முன்னிட்டு, முதல் நாளிலிருந்தே ஜெனரேட்டர் மூலம் மின்சார விநியோகம் சோதனை செய்யப்பட்டு வந்தது. மின்சார இணைப்பை ஜெனரேட்டருக்கு மாற்றும் (ஸ்விட்ச் ஓவர்) நேரத்தில் பிரச்னை ஏற்பட்டது. அதன்பிறகு ஜெனரேட்டர் மூலமாக மின்சாரம் பயன்படுத்தப்பட்டு வந்தது என்றும் அமைச்சர் நிர்மல் குமார் விளக்கமளித்தார்.
Minister Nirmal Kumar stated that there was no lapse in the security provided to the former Chief Minister.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.