FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

கிருஷ்ண ஜெயந்தி: முதல்வர் விஜய் வாழ்த்து!

கிருஷ்ண ஜெயந்தி திருநாளை முன்னிட்டு முதல்வர் விஜய்யின் வாழ்த்துச் செய்தி.

4 செப்டம்பர் 2026, 8:49 am IST
முதல்வர் விஜய் - கோப்புப்படம்
பகிர்:

கிருஷ்ண ஜெயந்தி திருநாளை முன்னிட்டு, தமிழ்நாட்டு மக்களுக்கு, முதல்வர் சி. ஜோசப் விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது குறித்து, அவர் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில் தெரிவித்திருப்பதாவது:

”அனைவரின் இல்லங்களும் உள்ளங்களும் மகிழ்ச்சியால் நிறையும் கிருஷ்ண ஜெயந்தி திருநாளில் அனைவருக்கும் எனது மனமார்ந்த நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

Advertisement

Advertisement

அநீதிக்கு எதிரான அறம் வெல்லும், எத்தகைய சூழலிலும் கடமை தவறாது செயல்பட வேண்டும், தர்மத்தின் வழியில்
மன உறுதியுடனும் நம்பிக்கையுடனும் வாழ்க்கைப் பயணத்தை முன்னெடுக்க வேண்டும் என்னும் ஸ்ரீகிருஷ்ணரின் உபதேசங்களைப் பின்பற்றி உயரிய வாழ்வியல் நெறிகளுடன் அன்பும் அறமும் தழைத்தோங்கும் நல்லுலகைப் படைத்திடுவோம்” என்று முதல்வர் விஜய் குறிப்பிட்டுள்ளார்.

summary

Chief Minister C. Joseph Vijay has extended his greetings to the people of Tamil Nadu on the occasion of Krishna Jayanthi.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments