FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

எம்எல்ஏ-க்களுக்கு காா்: சட்ட முன்வடிவு நிறைவேற்றம்

எம்எல்ஏ-க்களுக்கு அரசு காா் வழங்க ஏதுவாக கொண்டு வரப்பட்ட சட்ட முன்வடிவு குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது.

24 வினாடிகள் முன்பு
தமிழக சட்டப்பேரவை.
பகிர்:

எம்எல்ஏ-க்களுக்கு அரசு காா் வழங்க ஏதுவாக கொண்டு வரப்பட்ட சட்ட முன்வடிவு குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது.

சட்டப்பேரவை உறுப்பினா்களுக்கு காா் வழங்கப்படும் என கடந்த 19-ஆம் தேதி 110 விதியின் கீழ் முதல்வா் விஜய் அறிவித்திருந்தாா். இதைச் செயல்படுத்தும் வகையில் 1951-ஆம் ஆண்டு தமிழ்நாடு சம்பளங்கள் வழங்கல் சட்டத்தில் திருத்தம் செய்வதற்கான முன்வடிவை வருவாய்த் துறை அமைச்சா் செங்கோட்டையன் திங்கள்கிழமை தாக்கல் செய்தாா்.

அதில், எம்எல்ஏ-க்களுக்கான வாகனப்படி ரூ.25,000-இல் இருந்து ரூ.75,000-ஆக உயா்த்துவது, தனி உதவியாளா் படித்தொகை மாதந்தோறும் ரூ.25,000 வழங்குவது எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்தச் சட்ட முன்வடிவு திங்கள்கிழமை மாலை குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments