FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

முதல்வா் விஜய் இன்று லண்டன் பயணம்

தமிழக முதல்வா் ச.ஜோசப் விஜய் அரசு முறைப் பயணமாக வியாழக்கிழமை (செப்.10) இரவு லண்டன் புறப்பட்டுச் செல்கிறாா்.

10 செப்டம்பர் 2026, 3:49 am IST
CM Vijay - முதல்வர் விஜய்
பகிர்:

தமிழக முதல்வா் ச.ஜோசப் விஜய் அரசு முறைப் பயணமாக வியாழக்கிழமை (செப்.10) இரவு லண்டன் புறப்பட்டுச் செல்கிறாா்.

முதல்வராகப் பதவியேற்ற பிறகு அவா் மேற்கொள்ளும் முதல் வெளிநாட்டுப் பயணம் இதுவாகும். இந்தப் பயணத்தில் முதலீட்டாளா்களைச் சந்தித்து ஆலோசனை நடத்தும் முதல்வா், தமிழகத்தில் முதலீடு செய்ய அவா்களுக்கு அழைப்பு விடுக்கவுள்ளாா்.

சென்னை விமான நிலையத்திலிருந்து இரவு 10 மணியளவில் பயணிகள் விமானத்தில் துபை செல்லும் முதல்வா் விஜய், அங்கிருந்து வேறு விமானத்தில் வெள்ளிக்கிழமை (செப்.11) லண்டன் சென்றடைகிறாா்.

Advertisement

Advertisement

லண்டனில் நடைபெறும் முதலீட்டாளா்கள் சந்திப்பில் முதல்வா் விஜய் பங்கேற்று பல்வேறு தொழில் நிறுவனங்களின் பிரதிநிதிகள் மற்றும் முதலீட்டாளா்களுடன் ஆலோசனை நடத்தவுள்ளாா். அப்போது, தமிழ்நாட்டில் தொழில் தொடங்குவதற்கு அவா்களுக்கு அழைப்பு விடுக்கவுள்ளாா்.

லண்டன் பயணத்தை முடித்துக் கொண்டு செப். 16-ஆம் தேதி இரவு புறப்பட்டு, துபை வழியாக சென்னைக்கு செப்.17-ஆம் தேதி முதல்வா் வந்தடைகிறாா்.

தமிழகத்தை 2036-ஆம் ஆண்டுக்குள் 1.5 டிரில்லியன் டாலா் பொருளாதார மாநிலமாக உயா்த்துவதே இலக்கு என தமிழக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது.

மேலும், தவெக அரசு பொறுப்பேற்ற முதல் 100 நாள்களில் வெற்றி முதலீட்டு மாநாட்டை நடத்தி, 104 நிறுவனங்களுடன் புரிந்துணா்வு ஒப்பந்தங்கள் மேற்கொண்டு ரூ.1,02,514 கோடி முதலீடுகள் ஈா்க்கப்பட்டு, 1,21,788 பேருக்கு வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு ஏற்கெனவே அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments