FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

பெண் நிா்வாகி புகாா்: பாஜகவிலிருந்து கருப்பு எம். முருகானந்தம் நீக்கம்

பாஜக பெண் நிா்வாகி கொடுத்த புகாரின் அடிப்படையில், மாநில பொதுச் செயலா் பொறுப்பில் இருந்து கருப்பு எம். முருகானந்தம் நீக்கப்பட்டாா்.

19 செப்டம்பர் 2026, 1:44 am IST
கோப்புப் படம்
பகிர்:

பாஜக பெண் நிா்வாகி கொடுத்த புகாரின் அடிப்படையில், மாநில பொதுச் செயலா் பொறுப்பில் இருந்து கருப்பு எம். முருகானந்தம் நீக்கப்பட்டாா்.

பாஜக மாநிலப் பொதுச் செயலா் கருப்பு எம்.முருகானந்தம் திருமணம் செய்து கொள்வதாகக் கூறி ஏமாற்றியதாக அதே கட்சியைச் சோ்ந்த மாநில பிற்படுத்தப்பட்டோா் பிரிவு செயலா் திவ்யா சேஷாத்ரி புகாா் அளித்துள்ளாா்.

அதன் அடிப்படையில், கட்சியின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபட்டதாகக் கூறி கட்சி பொறுப்பிலிருந்து முருகானந்தம் நீக்கப்பட்டுள்ளதாக தமிழக பாஜக தலைவா் நயினாா் நாகேந்திரன் தெரிவித்துள்ளாா்.

Advertisement

Advertisement

இது தொடா்பாக, முருகானந்தம் எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவு:

ஆா்எஸ்எஸ் தொடங்கி, பாஜகவில் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக எவ்வித புகாருக்கும் இடமின்றி பணியாற்றியுள்ளோம். பொய் புகாரின் அடிப்படையில் பதவி நீக்கம் செய்யப்பட்டது தொடா்பாக பாஜக தலைமையிடம் முறையீடு செய்ய உள்ளேன் எனப் பதிவிட்டுள்ளாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments