FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் விலக்கு அளிக்கும் வகையில் அரசிதழ்: தவெக அரசுக்கு டிடிவி தினகரன் கண்டனம்

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் விலக்கு அளிக்கும் வகையில் அரசிதழ் பிறப்பித்த விவகாரத்தில் தவெக அரசுக்கு டிடிவி தினகரன் கண்டனம் தெரிவித்திருப்பது பற்றி...

27 செப்டம்பர் 2026, 1:08 pm IST
டிடிவி தினகரன்
பகிர்:

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் விலக்கு அளிக்கும் வகையில் அரசிதழ் பிறப்பித்திருப்பது கடும் கண்டனத்திற்குரியது என்று அமமுக பொதுச்செயலர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், தகவல் அறியும் உரிமைச் சட்டத்திலிருந்து பொதுத்துறையின் சட்டம் ஒழுங்கு பிரிவுக்கு விலக்கு - பொதுமக்களின் கேள்விகளுக்குப் பதிலளிக்க அஞ்சும் தவெக அரசால் எப்படி வெளிப்படையான ஆட்சியை வழங்க முடியும் ?

தமிழ்நாடு அரசின் பொதுத்துறையின் சட்டம் ஒழுங்கு பிரிவின் கீழ் வரும் சமுதாய மற்றும் சாதிய மோதல்கள், சட்டம் ஒழுங்கு தொடர்பான விசாரணைக் குழுக்களின் பரிந்துரைகள், காவல் மரணங்கள், துப்பாக்கிச் சூடு தொடர்பான விசாரணைகள், அரசியல் காரணங்களுக்காகப் பதிவு செய்யப்பட்ட வழக்குகள் மாணவர்கள், விவசாயிகள் போராட்டங்கள் தொடர்பான விவரங்களுக்குத் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் விலக்கு அளிக்கும் வகையில் அரசிதழ் பிறப்பித்திருப்பது கடும் கண்டனத்திற்குரியது.

Advertisement

Advertisement

தமிழகத்தின் அன்றாடம் அரங்கேறும் கொலை, கொள்ளை, பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைச் சம்பவங்கள் மற்றும் போதைப் பொருள் தாராளப்புழக்கத்தை கட்டுப்படுத்த எந்தவித நடவடிக்கையும் எடுக்காத காவல்துறை, அதற்கு மாறாக பொதுத்துறையின் சட்டம் ஒழுங்கு பிரிவில் இருக்கும் அனைத்து தகவல்களும் Intelligence உடன் தொடர்புடையது என வகைப்படுத்தி மூடி மறைக்க முயல்வது தன் நிர்வாகத் தடுமாற்றத்தையே வெளிப்படுத்துகிறது.

வெளிப்படையான நிர்வாகத்தை வழங்குவோம் என மேடைக்கு மேடை முழங்கிவிட்டு, பொதுமக்களின் அடிப்படை உரிமைகள் மற்றும் அரசின் அதிகார பயன்பாட்டுடன் தொடர்புடைய விவகாரங்களை மக்களின் பார்வைக்கு எட்டாத வகையில் மறைத்து வைப்பது எந்த வெளிப்படைத்தன்மையில் வருகிறது என்பதை முதல்வர் ஜோசப் விஜய் விளக்க வேண்டும்

ஆட்சிக்கு வந்த ஆறு மாதங்கள் கூட நிறைவடையாத நிலையில் அரசின் கோப்புகளைப் பொதுமக்களின் பார்வையிலிருந்து மறைக்க முயலும் தவெக அரசு, தனது ஆட்சிக்காலம் நிறைவடைவதற்குள் அரசுக்கும் மக்களுக்குமான தொடர்பை முழுமையாகத் துண்டித்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என்ற விமர்சனம் பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ளது.

எனவே, மக்களின் கேள்விகளுக்குப் பதிலளிக்க முடியாத அரசு நிர்வாகம் வெளிப்படையான நிர்வாகமாக இருக்கவே முடியாது என்பதை உணர்ந்து, தகவல் அறியும் உரிமைச் சட்டத்திலிருந்து பொதுத்துறையின் சட்டம் ஒழுங்கு பிரிவுக்கு விலக்கு அளிக்கும் அரசிதழை உடனடியாக ரத்து செய்திட வேண்டும் என முதல்வர் ஜோசப் விஜயை வலியுறுத்துகிறேன் என்று தெரிவித்துள்ளார்.

summary

AMMK General Secretary TTV Dhinakaran has stated that issuing a gazette notification providing exemption from the Right to Information Act is strongly condemnable.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments