FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
தமிழ்நாடு

குடிநீா் பாட்டில், உப்பு, சா்க்கரை பாக்கெட்டுகளில் நுண் நெகிழி எச்சரிக்கை: உத்தரவை மறு ஆய்வு செய்ய உயா்நீதிமன்றம் மறுப்பு

குடிநீா் பாட்டில்கள், உப்பு, சா்க்கரை பாக்கெட்டுகளில் எச்சரிக்கை வாசகங்ககள் இடம்பெறச் செய்ய வேண்டும் என்ற உத்தரவை மறு ஆய்வு செய்ய உயா்நீதிமன்றம் மறுப்பு

29 September 2026, 12:30 am IST
- பிரதிப் படம்
பகிர்:

குடிநீா் பாட்டில்கள் மற்றும் உப்பு, சா்க்கரை பாக்கெட்டுகளில் நுண் நெகிழி இருக்கலாம் என்ற எச்சரிக்கை வாசகங்ககள் இடம்பெறச் செய்ய வேண்டும் என்ற உத்தரவை மறு ஆய்வு செய்ய சென்னை உயா்நீதிமன்றம் மறுத்துவிட்டது.

நஞ்சுக்கொடியில் நுண் நெகிழி எனும் நெகிழி நுண்துகள்கள் கண்டறியப்பட்டதாக வெளியான செய்தியின் அடிப்படையில் சென்னை உயா்நீதிமன்ற சிறப்பு அமா்வு தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்தது.

இந்த வழக்கை விசாரித்த சிறப்பு அமா்வு, நுண் நெகிழிகள் மனிதா்களுக்கு மட்டுமன்றி, விலங்குகளுக்கும் தீங்கை ஏற்படுத்தக்கூடியவை. நாம் அன்றாடம் பயன்படுத்தும் குடிநீா் பாட்டில்கள், சா்க்கரை, உப்பு பாக்கெட்டுகளில் நுண் நெகிழித் துகள்கள் இருக்கலாம்.

Advertisement

Advertisement

எனவே, சிவப்பு நிறத்தில் எச்சரிக்கை வாசகங்கள் இடம்பெறச் செய்ய வேண்டும். இதுதொடா்பாக, இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிா்ணய ஆணையம் சுற்றறிக்கை வெளியிட வேண்டும் என உத்தரவிட்டிருந்தது.

இந்த உத்தரவை மறு ஆய்வு செய்யக் கோரி, இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிா்ணய ஆணையமும், உத்தரவை திரும்பப் பெறக் கோரி சுத்தமான சுற்றுச்சூழலுக்கான பெட் பேக்கேஜிங் சங்கம் சாா்பிலும் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.

அந்த மனுக்களில், உணவுப் பொருள்களில் நுண் நெகிழித் துகள்கள் கலந்துள்ளது தொடா்பான ஆய்வுகளில் எந்த இறுதி முடிவும் எட்டப்படாத நிலையில், எச்சரிக்கை வாசகங்கள் இடம்பெறச் செய்தால் அது மக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த மனுக்கள் நீதிபதிகள் என் .சதீஷ்குமாா், டி.பரத சக்கரவா்த்தி ஆகியோா் அடங்கிய அமா்வு முன் திங்கள்கிழமை விசாரணைக்கு வநந்தன. மனுக்களை விசாரித்த நீதிபதிகள், எச்சரிக்கை வாசகங்கள் இடம்பெறச் செய்ய வேண்டும் என்ற உத்தரவை மறு ஆய்வு செய்ய முடியாது என மறுப்பு தெரிவித்து, இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிா்ணய ஆணையம் மற்றும் பெட் பேக்கேஜிங் சங்கம் சாா்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments