FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

அவிநாசி சாலையில் தீப்பற்றி எரிந்த கார்! நல்வாய்ப்பாக நூலிழையில் உயிர் தப்பிய குடும்பம்

அவிநாசி சாலையில் தீப்பற்றி எரிந்த காரில் இருந்தவர்கள் நல்வாய்ப்பாக நூலிழையில் உயிர் தப்பிய குடும்பம்

49 வினாடிகள் முன்பு
தீப்பற்றி எரியும் கார் - பிரதி படம்
பகிர்:

கோவை: கோவை மாவட்டம் அவிநாசி சாலையில் சாலையின் நடுவே தீப்பற்றி எரிந்த காரால் அரசு மருத்துவமனை அருகே பரபரப்பு ஏற்பட்டது.

நல்வாய்ப்பாக, காரிலிருந்து வெளியேறிய குடும்பத்தினர் நூலிழையில் உயிர் தப்பினர்.

காரில் சென்று கொண்டிருந்த போது, திடீரென காரின் முன்பக்கத்திலிருந்து அடர்ந்த புகை வெளியேறியதைப் பார்த்ததும், காரில் இருந்தவர்கள் சாமர்த்தியமாக செயல்பட்டு வெளியே வந்ததால் உயிர் தப்பியதாகக் கூறியிருகிறார்கள்.

Advertisement

Advertisement

கோவை, அவிநாசி சாலையில் கே.எம்.சி.எச். மருத்துவமனை அருகே சென்று கொண்டு இருந்த கார் ஒன்று திடீரென நடுரோட்டில் தீப்பற்றி மளமளவென எரிந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும், பதற்றத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

நீலம்பூர் பகுதியில் இருந்து கோவை நகரை நோக்கி குடும்பத்தினருடன் கார் ஒன்று அவிநாசி சாலையில் வந்து கொண்டு இருந்தது. கார் கே.எம்.சி.எச். மருத்துவமனை எதிரே வந்தபோது, காரின் முன்பகுதியில் இருந்து திடீரென அடர்ந்த புகை வெளியேறுவதை ஓட்டுநர் கவனித்து உள்ளார்.

​அபாயத்தை உணர்ந்த ஓட்டுநர், உடனடியாகச் சமயோஜிதமாகச் செயல்பட்டுக் காரைச் சாலையோரமாக நிறுத்தி விட்டு, உள்ளே இருந்த குடும்பத்தினர் அனைவரையும் உடனடியாக வெளியேறச் செய்து உள்ளார்.

அவர்கள் காரை விட்டு கீழே இறங்கிய சில வினாடிகளிலேயே, எஞ்சின் பகுதியில் பற்றிய தீ காரின் அனைத்துப் பகுதிகளுக்கும் அதிவேகமாகப் பரவி மளமளவென எரியத் தொடங்கியது. சாலை நடுவே கார் கொழுந்து விட்டு எரிந்ததைக் கண்டு அவ்வழியாகச் சென்ற வாகன ஓட்டிகள் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.

​உடனடியாகச் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பீளமேடு தீயணைப்புத் துறையினர் மற்றும் போலீஸார், தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்து அணைத்தனர். இருப்பினும் கார் எரிந்து சாம்பலானது. நல்வாய்ப்பாக கீழே இறங்கியதால் பெரும் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டது.

காரில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாக இந்தத் தீ விபத்து ஏற்பட்டதா? என்ற கோணத்தில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments