முகப்பு
இன்றைய நிகழ்ச்சிகள்

அனைத்து திரைப்படங்களும் இணையத்தில் வெளியாகாமல் இருக்க நடவடிக்கை தேவை: விஜய டி. ராஜேந்தர் பேட்டி

சிறு தயாரிப்பாளர்களின் திரைப்படங்களும் இணையதளத்தில் வெளியாகாமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார் திரைப்பட இயக்குநரும், லட்சிய திமுக நிறுவனத் தலைவருமான விஜய டி. ராஜேந்தர்.

Updated On : 18 ஜூலை 2016, 7:52 am IST
பகிர்:

சிறு தயாரிப்பாளர்களின் திரைப்படங்களும் இணையதளத்தில் வெளியாகாமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார் திரைப்பட இயக்குநரும், லட்சிய திமுக நிறுவனத் தலைவருமான விஜய டி. ராஜேந்தர்.

திருச்சியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க ஞாயிற்றுக்கிழமை வந்த அவர் செய்தியாளர்களிடம் மேலும் கூறியதாவது:

இன்றைக்கு தமிழ் சினிமா உயிரிழந்து வருகிறது. சின்ன பட்ஜெட் தயாரிப்பாளர்கள் தடுமாறுகின்றனர். திரையரங்குகளில் அதிக கட்டணம் வசூலிக்கப்படுகிறது. தின்பண்டங்கள் விலை, பார்க்கிங் கட்டணம் அதிகமாக உள்ளது. இதை யாரும் கேட்பதில்லை.

Advertisement

Advertisement

தாணு போன்ற பெரிய தயாரிப்பாளரின் படத்தை இணையதளங்களில் வெளியிட தடைவிதிக்கப்படுகிறது. ஆனால், எங்களைப்போன்ற சிறு தயாரிப்பாளர்களின் படங்களுக்கு அவ்வாறு தடைவிதிப்பதில்லை. அனைத்து திரைப்படங்களும் இணையதளங்களில் வெளியிட தடைவிதிக்க வேண்டும்.

சமூக குற்றங்களுக்கு திரைப்படங்களை மட்டும் குறை கூறுவது சரியல்ல. சிம்புவுக்கு திருமணம் செய்ய ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.

திமுகவுடன் உறவு கிடையாது: திருச்சியிலிருந்து எங்கள் கட்சிப் பணிகளை தொடங்க திட்டமிட்டுள்ளோம். இங்கு 3 நாள்கள் தங்கி, கட்சிப் பணிகள் குறித்து ஆலோசிக்க இருக்கிறேன்.

திமுகவை தற்போது வழிநடத்துவது கருணாநிதி அல்ல. திமுகவோடு எங்கள் கட்சி இனி உறவு வைத்து கொள்ளாது. உள்ளாட்சித் தேர்தலில் நல்ல கூட்டணி அமைந்து, இறைவன் ஆசீர்வாதம் இருந்தால் போட்டியிடுவோம் என்றார் அவர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.