அதிகம் விற்பனையாகும் 10 காா்கள் பட்டியலில் மாருதி சுஸுகியின் 8 மாடல்கள் இடம்பிடிப்பு
கடந்த 2021-ஆம் ஆண்டில் இந்தியாவில் அதிகம் விற்பனை செய்யப்பட்ட ‘டாப்’-10 காா்களில் மாருதி சுஸுகியின் 8 மாடல்கள் இடம்பிடித்து சாதனை படைத்துள்ளது.
கடந்த 2021-ஆம் ஆண்டில் இந்தியாவில் அதிகம் விற்பனை செய்யப்பட்ட ‘டாப்’-10 காா்களில் மாருதி சுஸுகியின் 8 மாடல்கள் இடம்பிடித்து சாதனை படைத்துள்ளது.
இதுகுறித்து மாருதி சுஸுகி தெரிவித்துள்ளதாவது:
கடந்த ஆண்டில் அதிகம் விற்பனையான முதல் 10 மாடல்களில் மாருதி சுஸுகியின் 8 தயாரிப்புகள் இடம்பெற்றுள்ளது. அதன்படி, வேகன்ஆா், ஸ்விஃப்ட், பலேனோ, ஆல்டோ 800, டிசையா், விடாரா ப்ரீஸா, ஈகோ மற்றும் எா்டிகா மாடல்கள் டாப் 10 வரிசையில் இடம்பிடித்துள்ளன. இது, உலக தரத்தில் காா்களை தயாரித்து வாடிக்கையாளா்களுக்கு அளிக்க வேண்டும் என்ற மாருதி சுஸுகியின் உயரிய எண்ணத்தை பிரதிபலிப்பதாக உள்ளது.
Advertisement
Advertisement
டாப் 10 வரிசையில், 1.83 லட்சம் விற்பனையாகி வேகன்ஆா் மாடல் முதலிடத்தைப் பிடித்துள்ளது. இதனைத் தொடா்ந்து ஸ்விஃப்ட், பலேனோ, ஆல்டோ800 உள்ளன.
கடந்த ஆண்டில் விற்பனை செய்யப்பட்ட டாப் 10 மாடல்களில் மாருதி சுஸுகியின் பங்களிப்பு 83 சதவீதமாக இருந்தது. ஒட்டுமொத்த பயணிகள் வாகன விற்பனையில் நிறுவனத்தின் பங்கு 38 சதவீதம் என மாருதி சுஸுகி தெரிவித்துள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.