முகப்பு
வணிகம்

டாப் 10 நிறுவனங்களில் எட்டு நிறுவனங்களின் சந்தை மூலதனம் ரூ.1.65 லட்சம் கோடி இழப்பு!

டாப் 10 மதிப்புமிக்க நிறுவனங்களில் எட்டு நிறுவனங்களின் சந்தை மதிப்பீடு கடந்த வாரம் சுமார் ரூ.1,65,180.04 கோடி இழப்பை சந்தித்தன.

Updated On : 18 நவம்பர், 2024 at 4:02 PM
கோப்புப் படம்
பகிர்:
Updated On : 17 நவம்பர், 2024 at 8:25 PM

புதுதில்லி: அதிக மதிப்புமிக்க 10 நிறுவனங்களில் எட்டு நிறுவனங்களின் சந்தை மதிப்பீடு கடந்த வாரம் சுமார் ரூ.1,65,180.04 கோடி இழப்பை சந்தித்தன. இதில் எச்.டி.எஃப்.சி. வங்கி மற்றும் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா பங்குகள் மிகவும் பாதிப்புக்குள்ளானது.

கடந்த வாரத்தில் தேசிய பங்குச்சந்தை குறியீடு சென்செக்ஸ் 2.39 சதவிகிதம் சரிந்தது. குருநானக் ஜெயந்தியை முன்னிட்டு வெள்ளிக்கிழமை பங்குச் சந்தைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.

அதிகரித்து வரும் பணவீக்கம் மற்றும் கார்ப்பரேட் வருவாயில் தொடர்ச்சியான ஏமாற்றங்கள் ஆகியவை முதலீட்டாளர்களின் உணர்வை பெரிதும் பாதிப்படைய செய்துள்ளது என்றார் ரெலிகேர் புரோக்கிங் லிமிடெட் ஆராய்ச்சி - மூத்த துணைத் தலைவர் அஜித் மிஸ்ரா.

Advertisement

Updated On : 17 நவம்பர், 2024 at 8:32 PM

இதையும் படிக்க: அந்நியச் செலாவணி கையிருப்பு 67,565 கோடி டாலராக சரிவு

ஹெச்டிஎஃப்சி வங்கியின் சந்தை மதிப்பானது ரூ.46,729.51 கோடி குறைந்து ரூ.12,94,025.23 கோடியாக உள்ள நிலையில் ஸ்டேட் வங்கியின் சந்தை மதிப்பானது ரூ.34,984.51 கோடி குறைந்து ரூ.7,17,584.07 கோடி ஆனது.

இந்துஸ்தான் யூனிலீவர் நிறுவனத்தின் சந்தை மதிப்பானது ரூ.27,830.91 கோடி குறைந்து ரூ.5,61,329.10 கோடியாகவும், இதே ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் சந்தை மதிப்பானது ரூ.22,057.77 கோடி குறைந்து ரூ.17,15,498.91 கோடியாக உள்ளது.

ஐடிசி-யின் சந்தை மூலதனமயமாக்கல் ரூ.15,449.47 கோடி குறைந்து ரூ.5,82,764.02 கோடியாகவும், பார்தி ஏர்டெல் ரூ.11,215.87 கோடி குறைந்து ரூ.8,82,808.73 கோடியாகவும் உள்ளது.

இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகத்தின் மதிப்பீடு ரூ.4,079.62 கோடி குறைந்து ரூ.5,74,499.54 கோடியாகவும், ஐ.சி.ஐ.சி.ஐ வங்கியின் மதிப்பீடு ரூ.2,832.38 கோடி குறைந்து ரூ.8,85,599.68 கோடியாகவும் உள்ளது.

Updated On : 17 நவம்பர், 2024 at 8:34 PM

எனினும் இன்போசிஸ் நிறுவனத்தின் சந்தை மதிப்பானது ரூ.13,681.37 கோடி ரூபாய் அதிகரித்து ரூ.7,73,962.50 கோடி ரூபாயாகவும், டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் நிறுவனத்தின் சந்தை மதிப்பு ரூ.416.08 கோடி ரூபாய் அதிகரித்து ரூ.15,00,113.36 கோடி ரூபாயாக நிலைபெற்றது.

மிகவும் மதிப்புமிக்க உள்நாட்டு நிறுவனமாக ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் உள்ள நிலையில் அதனைத் தொடர்ந்து டிசிஎஸ், எச்டிஎஃப்சி வங்கி, ஐசிஐசிஐ வங்கி, பார்தி ஏர்டெல், இன்ஃபோசிஸ், ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா, ஐடிசி, எல்ஐசி மற்றும் இந்துஸ்தான் யூனிலீவர் ஆகியவை உள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.