சென்செக்ஸ் கடந்த 2 நாள்களில் 1,200 புள்ளிகள் சரிந்துள்ளது. மேலும், நிஃப்டி 24,900 புள்ளிகளுக்கு கீழ் சரிந்துள்ளது.
மும்பை பங்குச் சந்தையில் வாரத்தின் கடைசிநாளான இன்று(ஜூலை 25) காலை நேற்றைப் போலவே இன்றும் வர்த்தகம் சரிவுடன் தொடங்கியது. மும்பை பங்குச்சந்தை குறியீடான சென்செக்ஸ் 600 புள்ளிகள் வரை குறைந்து 81,540 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. இது இண்ட்ராடே வர்த்தகத்தில் 1 சதவிகிதம் சரிவாகும்.
அதேபோல், தேசிய குறியீட்டு எண்ணான நிஃப்டியும் கிட்டத்தட்ட 1 சதவிகிதமான 196 புள்ளிகள் குறைந்து 24,844 புள்ளிகளில் வர்த்தகமானது. மிட்கேப் இண்டெக்ஸ் மற்றும் ஸ்மால் கேப் இண்டெக்ஸ் இரண்டும் முறையே 1 சதவிகிதம் மற்றும் 1.4 சதவிகிதம் சரிவைச் சந்தித்தன.
கடந்த இரண்டு நாள்களில் மட்டும் சென்செக்ஸ் கிட்டத்தட்ட 1.4 சதவிகிதமான 1200 புள்ளிகள் வரை சரிவைச் சந்தித்துள்ளது. இதனால், மும்பை பங்குச் சந்தையில் நேற்றுமுன் தினமான 23 ஆம் தேதியிலிருந்து இன்று வரை முதலீட்டார்கள் ரூ7 லட்சம் கோடி இழப்பைச் சந்தித்துள்ளனர்.
மும்பை பங்குச்சந்தையில் பாரதி ஏர்டெல், டாடா மோட்டார்ஸ், சன் பார்மா, அல்ட்ராடெக் உள்ளிட்ட சில குறிப்பிட்ட பங்குகள் மட்டுமே லேசான ஏற்றத்துடன் வர்த்தகமாகி வருகின்றன. மற்ற அனைத்து பங்குகளும் கடுமையான சரிவைச் சந்தித்துள்ளன.
இதையும் படிக்க : மாநிலங்களவை உறுப்பினராக தமிழில் பதவியேற்றார் கமல்ஹாசன்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.