கோப்புப்படம் IANS
வணிகம்

சரிவில் பங்குச் சந்தை! 400 புள்ளிகள் குறைந்த சென்செக்ஸ்!

இன்றைய பங்குச் சந்தை நிலவரம் பற்றி...

DIN

வாரத்தின் முதல் நாளான இன்று(திங்கள்கிழமை) பங்குச் சந்தை சரிவுடன் தொடங்கி வர்த்தகமாகி வருகின்றது.

மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் இன்று காலை
81,214.42 என்ற புள்ளிகளில் தொடங்கியது. காலை 11:45 மணி நிலவரப்படி 437.21 புள்ளிகள் குறைந்து 81,017.77 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. அதற்கு முன்னதாக 700 புள்ளிகள் வரை சென்செக்ஸ் குறைந்தது.

அதேபோல தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி தற்போது 112.70 புள்ளிகள் குறைந்து 24,638.00 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.

சென்செக்ஸில் ஹெச்டிஎப்சி வங்கி, ஹெச்.சி.எல் டெக், இன்ஃபோசிஸ், டெக் மஹிந்திரா, டாடா ஸ்டீல் ஆகிய நிறுவனங்கள் அதிக இழப்பைச் சந்தித்துள்ளன. ஹிந்துஸ்தான் யூனிலீவர், அதானி போர்ட்ஸ், மஹிந்திரா & மஹிந்திரா உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் விலை குறைந்தன. பெரும்பாலான வங்கிகள் இன்று அதிக லாபமடைந்துள்ளன.

உலோகங்கள் மீதான அமெரிக்காவின் வரி, உலகளாவிய வர்த்தகப் போர் பதற்றங்களினால் பங்குச் சந்தை சரிந்து வருவதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

உலகளவில் தென் கொரியா, ஜப்பான், ஷாங்காய், ஹாங்காங் பங்குச் சந்தைகளும் இன்று சரிவைச் சந்தித்து வருகின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தமிழறிஞா் சீகன்பால்கு நினைவு மணிமண்டபம் கட்ட அடிக்கல் நாட்டு விழா

தங்கம் வெல்லும் வாய்ப்பை சீனாவிடம் நழுவவிட்ட இந்தியா! சாத்விக், சிராக் இணைக்கு வெண்கலம்!

இதற்காக ஒரு மாதத்துக்கும் மேலாக காத்திருந்தோம்; இலங்கை தொடருக்கு முன்பாக ஹர்மன்பிரீத் உற்சாகம்!

மதச்சார்பின்மை சொல்லைக் கேட்டாலே வேப்பங்காயாக கசக்கிறது பாஜகவுக்கு: முதல்வர் ஸ்டாலின்

வட மாநிலங்களில் காற்று மாசு: மலைப் பிரதேசங்களுக்குப் படையெடுத்த சுற்றுலாப் பயணிகள்!

SCROLL FOR NEXT