மும்பை பங்குச் சந்தை  கோப்புப் படம்
வணிகம்

சரிவில் பங்குச் சந்தை! இன்றைய நிலவரம் என்ன?

இன்றைய பங்குச் சந்தை நிலவரம் பற்றி...

DIN

பங்குச்சந்தைகள் நேற்று ஏற்றத்துடன் முடிவடைந்த நிலையில் இன்று(வெள்ளிக்கிழமை) சரிவுடன் தொடங்கி வர்த்தகமாகி வருகின்றன.

மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் இன்று காலை 81,465.69 என்ற புள்ளிகளில் தொடங்கிய நிலையில் காலை 11:44 மணி நிலவரப்படி 279.41 புள்ளிகள் குறைந்து 81,353.62 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.

அதேபோல தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 87.70 புள்ளிகள் குறைந்து 24,745.90 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.

இன்ஃபோசிஸ், ஹெச்.சி.எல் டெக், டெக் மஹிந்திரா, டாடா மோட்டார்ஸ், இண்டஸ்இண்ட் வங்கி, பாரதி ஏர்டெல், சன் பார்மா, டாடா ஸ்டீல், டிசிஎஸ் ஆகிய நிறுவனங்களின் பங்குகள் 2 சதவீதம் வரை சரிந்துள்ளன.

நிஃப்டி மிட்கேப், ஸ்மால்கேப் குறியீடுகள் முறையே 0.2 சதவீதம், 0.25 சதவீதம் சரிந்தன. துறைகளில் நிஃப்டி மெட்டல் 1.5 சதவீதம், நிஃப்டி ஐடி 0.96 சதவீதம், நிஃப்டி ஆட்டோ 0.96 சதவீதம் சரிவடைந்துள்ளன.

அதேநேரத்தில் எட்டர்னல், பஜாஜ் பின்சர்வ், ஹெச்டிஎப்சி, கோல் இந்தியா உள்ளிட்ட ஒரு சில நிறுவனங்களின் பங்குகள் விலை உயர்ந்துள்ளன.

இரண்டு நாள்கள் சரிவுக்குப் பிறகு நேற்று ஏற்றத்துடன் பங்குச்சந்தை வர்த்தகம் நிறைவடைந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தமிழறிஞா் சீகன்பால்கு நினைவு மணிமண்டபம் கட்ட அடிக்கல் நாட்டு விழா

தங்கம் வெல்லும் வாய்ப்பை சீனாவிடம் நழுவவிட்ட இந்தியா! சாத்விக், சிராக் இணைக்கு வெண்கலம்!

இதற்காக ஒரு மாதத்துக்கும் மேலாக காத்திருந்தோம்; இலங்கை தொடருக்கு முன்பாக ஹர்மன்பிரீத் உற்சாகம்!

மதச்சார்பின்மை சொல்லைக் கேட்டாலே வேப்பங்காயாக கசக்கிறது பாஜகவுக்கு: முதல்வர் ஸ்டாலின்

வட மாநிலங்களில் காற்று மாசு: மலைப் பிரதேசங்களுக்குப் படையெடுத்த சுற்றுலாப் பயணிகள்!

SCROLL FOR NEXT