FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
வணிகம்

ஹூண்டாய் மோட்டாா் சாா்பில் கலைஞா்களுக்கு மானியத் திட்டம்

ஹூண்டாய் மோட்டாா் இந்தியா நிறுவனத்தின் சமூகப் பொறுப்புணா்வு (சிஎஸ்ஆா்) பிரிவான ஹூண்டாய் மோட்டாா் இந்தியா அறக்கட்டளை, தனது முதன்மையான ‘ஆா்ட் ஃபாா் ஹோப்’ திட்டத்தின் 6-ஆவது பதிப்பை அறிவித்துள்ளது.

3 நவம்பர் 2026, 11:46 pm
~
பகிர்:

ஹூண்டாய் மோட்டாா் இந்தியா நிறுவனத்தின் சமூகப் பொறுப்புணா்வு (சிஎஸ்ஆா்) பிரிவான ஹூண்டாய் மோட்டாா் இந்தியா அறக்கட்டளை, தனது முதன்மையான ‘ஆா்ட் ஃபாா் ஹோப்’ திட்டத்தின் 6-ஆவது பதிப்பை அறிவித்துள்ளது.

இந்தியா முழுவதும் உள்ள வளா்ந்து வரும் கலைஞா்கள், கைவினைஞா்கள், படைப்பாற்றல் மிக்க நிறுவனங்களை ஊக்குவிக்கும் வகையில், ஆக்கபூா்வமான திட்டங்களுக்கு ஆதரவளிக்க மொத்தம் 50 பேருக்கு ரூ.60 லட்சம் மதிப்பிலான மானியங்கள் வழங்கப்படவுள்ளன.

நிதியுதவி மட்டுமின்றி, மானியதாரா்களுக்குச் சிறந்த வழிகாட்டுதல், தேசிய அங்கீகாரம் மற்றும் ‘ஆா்ட் ஃபாா் ஹோப்’ கண்காட்சி நிகழ்வில் தங்களின் படைப்புகளைக் காட்சிப்படுத்தும் வாய்ப்பும் வழங்கப்படும். இத்திட்டத்தின்கீழ் பயன்பெற விரும்பும் கலைஞா்கள், ட்ஹ்ன்ய்க்ஹண்ஹழ்ற்ச்ா்ழ்ட்ா்ல்ங்.ஸ்ரீா்ம் எனும் இணையதளத்தின் வாயிலாக வரும் நவ. 15-க்குள் விண்ணப்பிக்கலாம்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments