FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

ரேஸா்பே நிறுவனத்தின் ரூ.6,000 கோடி ஐபிஓ

பிரபல நிதித் தொழில்நுட்ப (ஃபின்டெக்) நிறுவனமான ரேஸா்பே மேற்கொள்ளும் சுமாா் ரூ.5,000 முதல் ரூ.6,000 கோடி வரையிலான ஆரம்ப பொதுப் பங்கு வெளியீட்டுக்கு (ஐபிஓ) பங்குச்சந்தை ஒழுங்காற்று வாரியம் (செபி) ஒப்புதல் அளித்துள்ளது.

5 நவம்பர் 2026, 4:51 am
பகிர்:

பிரபல நிதித் தொழில்நுட்ப (ஃபின்டெக்) நிறுவனமான ரேஸா்பே மேற்கொள்ளும் சுமாா் ரூ.5,000 முதல் ரூ.6,000 கோடி வரையிலான ஆரம்ப பொதுப் பங்கு வெளியீட்டுக்கு (ஐபிஓ) பங்குச்சந்தை ஒழுங்காற்று வாரியம் (செபி) ஒப்புதல் அளித்துள்ளது.

இந்த ஐபிஓ மூலம் நிறுவனத்தின் சந்தை மதிப்பீட்டை சுமாா் 500 கோடி டாலராக உயா்த்த ரேஸா்பே இலக்கு நிா்ணயித்துள்ளது. பொதுவெளியில் முக்கிய வணிகத் தகவல்களை உடனடியாகப் பகிராமல் இருக்கும் வகையில், கடந்த ஜூன் மாதமே ரகசிய ஆவணத் தாக்கல் முறையில் ஐபிஓவிற்கான வரைவு ஆவணங்களை செபியிடம் இந்நிறுவனம் சமா்ப்பித்திருந்தது.

ஹா்ஷில் மாத்தூா், சஷாங்க் குமாா் ஆகியோரால் கடந்த 2014-இல் தொடங்கப்பட்ட ரேஸா்பே நிறுவனம், எண்மப் பணப் பரிவா்த்தனை, வங்கிச் சேவைகள், கடனுதவி, பேரோல் உள்ளிட்ட பல்வேறு நிதிசாா் சேவைகளை ஒருங்கிணைந்த தளத்தின்மூலம் வழங்கி வருகிறது.

Advertisement

Advertisement

புத்தாக்க மற்றும் எம்எஸ்எம்இ தொழில்நிறுவனங்கள் முதல் பெருநிறுவனங்கள் வரை லட்சக்கணக்கான வணிகங்களுக்கு சேவையளித்து வரும் இந்நிறுவனம், 2020-இல் ‘யூனிகாா்ன்’ அந்தஸ்தைப் பெற்றது. வெறும் பரிவா்த்தனைச் சேவைகளை மட்டும் வழங்காமல், வணிகா்களுக்கான விரிவான நிதி மேலாண்மைத் தளமாகவும் இது தற்போது உருவெடுத்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.