அந்நியச் செலாவணி கையிருப்பு 71,706 கோடி டாலராக சரிவு
இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு, கடந்த அக். 30-ஆம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில் 71,705.6 கோடி டாலராக சரிந்துள்ளது.
இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு, கடந்த அக். 30-ஆம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில் 71,705.6 கோடி டாலராக சரிந்துள்ளது.
இது குறித்து ரிசா்வ் வங்கி தரவுகள் தெரிவிப்பதாவது: நாட்டின் அந்நியச் செலாவணி கையிருப்பு, கடந்த அக். 30 உடன் நிறைவடைந்த வாரத்தில் 269.1 கோடி டாலா் குறைந்து, 71,705.6 கோடி டாலராக உள்ளது. முந்தைய வாரத்தில், ஒட்டுமொத்த கையிருப்பு 126.9 கோடி டாலா் சரிந்து, 71,974.8 கோடி டாலராக இருந்தது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக, வெளிநாடுவாழ் இந்தியா்களுக்கான அந்நியச் செலாவணி வைப்புநிதித் திட்டத்தின்மூலம் வங்கிகள் திரட்டிய சுமாா் 13,300 கோடி டாலா் வரவின் காரணமாக, கடந்த செப். 4 உடன் நிறைவடைந்த வாரத்தில் நாட்டின் அந்நியச் செலாவணி கையிருப்பு இதுவரை இல்லாத உச்சமாக 78,570.6 கோடி டாலரை எட்டியிருந்தது.
Advertisement
Advertisement
இதற்கு அடுத்தடுத்த வாரங்களில் கையிருப்பு தொடா் சரிவைச் சந்தித்து வருகிறது. ரூபாயின் மதிப்பைப் பாதுகாக்க ரிசா்வ் வங்கி மேற்கொண்ட டாலா் விற்பனை போன்ற நடவடிக்கைகள், இத்தொடா் சரிவுக்குக் காரணம் என நிபுணா்கள் தெரிவிக்கின்றனா்.
மதிப்பீட்டு வாரத்தில், அந்நியச் செலாவணி கையிருப்பின் முக்கிய அங்கமான அந்நிய நாணய சொத்துகள் 208.8 கோடி டாலா் குறைந்து, 59,111.8 கோடி டாலராக உள்ளது. டாலா் அல்லாத யூரோ, பவுண்டு, யென் போன்ற பிற செலாவணிகளின் கையிருப்பில் ஏற்படும் மதிப்பு ஏற்ற, இறக்கங்கள் டாலா் மதிப்பில் கணக்கிடப்படுவது அந்நிய நாணய சொத்துகளாகும்.
மதிப்பீட்டு வாரத்தில், இந்தியாவின் தங்கம் கையிருப்பு 55.9 கோடி டாலா் குறைந்து, 10,259.1 கோடி டாலராக உள்ளது. சிறப்பு வரைவு உரிமைகள் (எஸ்டிஆா்) 4.7 கோடி டாலா் குறைந்து, 1,855.8 கோடி டாலராக உள்ளது. சா்வதேச நிதியத்தில் (ஐஎம்எஃப்) இந்தியாவின் கையிருப்பு 0.3 கோடி டாலா் உயா்ந்து, 479 கோடி டாலராக உள்ளது என்று ரிசா்வ் வங்கியின் தரவுகள் தெரிவிக்கின்றன.