FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

ஐஷர் மோட்டார்ஸின் Q2 லாபம் 15% உயர்வு!

ஐஷர் மோட்டார்ஸ், அதன் செயல்திறன், ராயல் என்ஃபீல்ட் மற்றும் வர்த்தக வாகனங்களின் விற்பனை ஆகியவற்றில் ஏற்பட்ட வலுவான வளர்ச்சியின் காரணமாக, அதன் ஒருங்கிணைந்த நிகர லாபம் உயர்ந்துள்ளது.

13 நவம்பர் 2026, 10:29 pm
ஐஷா் மோட்டாா்ஸ்
பகிர்:

புதுதில்லி: ஐஷர் மோட்டார்ஸ் லிமிடெட், அதன் செயல்திறன், ராயல் என்ஃபீல்ட் மற்றும் வர்த்தக வாகனங்களின் விற்பனை அளவு ஆகியவற்றில் ஏற்பட்ட வலுவான வளர்ச்சியின் காரணமாக, நடப்பு நிதியாண்டின் 2வது காலாண்டில் அதன் ஒருங்கிணைந்த நிகர லாபம் ஆண்டுக்கு ஆண்டு 15% வளர்ச்சியைப் பதிவு செய்தது.

நிறுவனத்தின் ஒருங்கிணைந்த நிகர லாபம், இந்தக் காலாண்டில் ரூ. 1,573 கோடியாக இருந்தது. கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் இது ரூ. 1,369 கோடியாக இருந்தது.

Advertisement

Advertisement

நிறுவனத்தின் வட்டி, வரி, தேய்மானம் மற்றும் கடன்தொகை நீக்கத்திற்கு முந்தைய வருவாய் கடந்த ஆண்டு இதே காலாண்டில் பதிவான ரூ.1,512 கோடியிலிருந்து 16 சதவீதம் அதிகரித்து, தற்போது ரூ.1,760 கோடியாக உயர்ந்துள்ளது.

செயல்பாடு மூலம் கிடைத்த வருவாய், கடந்த ஆண்டின் இதே காலாண்டில் ரூ.6,172 கோடியிலிருந்து 20 சதவீதம் அதிகரித்து, புதிய உச்சமாக ரூ.7,422 கோடியாக உயர்ந்துள்ளது.

ராயல் என்ஃபீல்டு நிறுவனம், கடந்த ஆண்டை விட 15 சதவீதம் விற்பனை வளர்ச்சியைப் பதிவு செய்து 3.77 லட்சம் மோட்டார் சைக்கிள்களை விற்பனை செய்துள்ளது. இது அந்நிறுவனத்தின் வரலாற்றிலேயே ஒரே காலாண்டில் பதிவான அதிகபட்ச விற்பனையாகும். அதேபோல், VE கமர்ஷியல் வெஹிக்கிள்ஸ் லிமிடெட் (VECV) நிறுவனத்தின் வாகன விற்பனை 28.2 சதவீதம் அதிகரித்து 28,071 ஆக உயர்ந்துள்ளது.

ஐஷர் மோட்டார்ஸ் நிறுவனம், தனது கூட்டு நிறுவனமான VE கமர்ஷியல் வெஹிக்கிள்ஸ் லிமிடெட் (VECV) நிறுவனத்தின் லாபத்தில் தனது பங்காக ரூ.186 கோடியைப் பெற்றுள்ளது. இதுவே கடந்த நிதியாண்டில் இந்தத் தொகை ரூ.135 கோடியாக இருந்தது.

summary

Eicher Motors Ltd on Friday posted 15 per cent year-on-year growth in consolidated net profit.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.