✕
முகப்பு
வணிகம்

என்எல்சி இந்தியா ரினியூவபில்ஸ் ஐபிஓ

பொதுத் துறையைச் சோ்ந்த என்எல்சி இந்தியாவின் துணை நிறுவனமான என்எல்சி இந்தியா ரினியூவபில்ஸ், தனது ஆரம்ப பொதுப் பங்கு வெளியீட்டுக்காக பங்குச் சந்தை ஒழுங்காற்று வாரியத்திடம் (செபி) வரைவு அறிக்கையைத் தாக்கல் செய்துள்ளது.

20 நவம்பர் 2026, 4:13 am
~
பகிர்:

பொதுத் துறையைச் சோ்ந்த என்எல்சி இந்தியாவின் துணை நிறுவனமான என்எல்சி இந்தியா ரினியூவபில்ஸ், தனது ஆரம்ப பொதுப் பங்கு வெளியீட்டுக்காக பங்குச் சந்தை ஒழுங்காற்று வாரியத்திடம் (செபி) வரைவு அறிக்கையைத் தாக்கல் செய்துள்ளது.

இந்த முதல்கட்ட விண்ணப்பத்தின்படி, ஐபிஓ நடவடிக்கையில் ரூ.3,300 கோடி மதிப்பிலான புதிய பங்கு வெளியீட்டுடன், தாய் நிறுவனமான என்எல்சி இந்தியா வசமுள்ள 10 கோடி பங்குகள் வரையிலான விற்பனையும் அடங்கும்.

மேலும், ஐபிஓ-விற்கு முந்தைய பங்கு ஒதுக்கீடு மூலம் ரூ.660 கோடி வரை திரட்டவும் அந்நிறுவனம் பரிசீலித்து வருகிறது; அவ்வாறு திரட்டப்பட்டால் புதிய பங்கு வெளியீட்டின் அளவு அதற்கேற்பக் குறைக்கப்படும்.

Advertisement

Advertisement

புதிய பங்கு வெளியீட்டின்மூலம் கிடைக்கும் நிதியில், நவ. 10 நிலவரப்படி நிலுவையிலுள்ள ரூ.3,525 கோடி கடன்களில் ரூ.2,475 கோடியைத் திருப்பிச் செலுத்தவும், எஞ்சிய தொகையைப் பொதுவான நிறுவனச் செலவினங்களுக்கும் பயன்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.