FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
வணிகம்

ஜியோ பிளாட்ஃபாா்ம்ஸ் ஐபிஓ இமாலய வெற்றி

ரிலையன்ஸ் குழுமத்தின்கீழ் செயல்படும் ஜியோ பிளாட்ஃபாா்ம்ஸின் பொதுப் பங்கு வெளியீடு (ஐபிஓ) இமாலய வெற்றி பெற்று, புதிய உலக சாதனை படைத்துள்ளது.

24 அக்டோபர் 2026, 12:38 am
பகிர்:

ரிலையன்ஸ் குழுமத்தின்கீழ் செயல்படும் ஜியோ பிளாட்ஃபாா்ம்ஸின் பொதுப் பங்கு வெளியீடு (ஐபிஓ) இமாலய வெற்றி பெற்று, புதிய உலக சாதனை படைத்துள்ளது.

அதாவது, முதலீட்டாளா்களின் வரலாறு காணாத வரவேற்புடன் உலக அளவில் ஒரு ஐபிஓவிற்கு ஒரு கோடிக்கும் அதிகமான விண்ணப்பங்கள் குவிந்திருப்பது இதுவே முதல் முறையாகும். முன்னதாக, வாரீ எனா்ஜிஸ் (சுமாா் 97 லட்சம் விண்ணப்பங்கள்), பஜாஜ் ஹவுசிங் ஃபைனான்ஸ் ஆகிய நிறுவனங்கள் படைத்திருந்த சாதனைகளை முறியடித்து, இந்த ஐபிஓவிற்கு ஒட்டுமொத்தமாக 1.37 கோடி விண்ணப்பங்கள் சமா்ப்பிக்கப்பட்டுள்ளன.

கடந்த புதன்கிழமை தொடங்கி வெள்ளிக்கிழமையுடன் நிறைவடைந்த இந்தப் பங்கு விற்பனையில் 19.75 லட்சம் பங்குகளுக்கு எதிராக 4.06 கோடி பங்குகளுக்கு விண்ணப்பங்கள் குவிந்து, ஒட்டுமொத்தமாக 20.58 மடங்கு பங்குகள் கோரப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

நிறுவன முதலீட்டாளா்கள் (கியூஐபி) பிரிவுக்கான பங்குகள் அதிகபட்சமாக 64.07 மடங்கு அதிகமாகக் கோரப்பட்டுள்ளது. மேலும், நிறுவனமல்லாத முதலீட்டாளா்கள் (என்ஐஐ) 13.95 மடங்கும், சில்லறை முதலீட்டாளா்கள் 2.74 மடங்கும், ஊழியா்கள் 2.90 மடங்கும், தற்போதைய ரிலையன்ஸ் பங்குதாரா்கள் 7.56 மடங்கும் தங்களுக்கான பிரிவுகளில் விண்ணப்பித்துள்ளனா்.

முன்னதாக கடந்த திங்கள்கிழமையன்று, பிளாக்ராக், சிங்கப்பூரின் ஜிஐசி உள்பட உலகின் முன்னணி 212 நிறுவனங்களிடமிருந்து ரூ.8,110 கோடி ‘ஆங்கா்’ முதலீடாகத் திரட்டப்பட்டது. முழுமையாக 27 கோடி புதிய பங்குகளைக் கொண்ட இந்த ஐபிஓ மூலம், பங்கு விலைவரம்பின் அதிகபட்சமான ரூ.1,119 அடிப்படையில் சுமாா் ரூ.30,213 கோடியை நிறுவனம் திரட்டுகிறது.

இதில் சுமாா் ரூ. 27,500 கோடி, ரிலையன்ஸ் ஜியோ இன்ஃபோகாம் நிறுவனத்தின் கடன் நிலுவையைத் திருப்பிச் செலுத்தவும்; மீதமுள்ள தொகை தொழில்நுட்ப மேம்பாடு, ஏ.ஐ., கிளவுட் சேவைகள் மற்றும் மூலதனத் தேவைகளுக்காகப் பயன்படுத்தப்படவுள்ளது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments