விழாக்கால விற்பனை: 1.60 லட்சம் தற்காலிகப் பணியாளர்களை நியமிக்கும் அமேசான்!
விழாக்கால விற்பனைகளுக்காக 400 நகரங்களில் 1,60,000 தற்காலிகப் பணியாளர்களை அமேசான் நியமிக்கவுள்ளது குறித்து...
அடுத்தடுத்த விழாக்காலங்களின் விற்பனைகளுக்காக நாடு முழுவதும் 400 நகரங்களில் 1,60,000 தற்காலிகப் பணியாளர்களை அமேசான் நிறுவனம் நியமிக்கவுள்ளது.
இணையதள விற்பனை மற்றும் விரைவு வர்த்தக செயல்பாடுகளின்போது, பொருள்களை எடுப்பது, பேக்கிங் செய்வது, வாடிக்கையாளர்களுக்கு டெலிவரி செய்வது போன்ற செயல்களுக்காக தற்காலிக பணியாளர்கள் நியமிக்கப்படவுள்ளனர்.
இப்பணி நியமனமானது மெட்ரோ நகரங்கள் தொடங்கி, பிரிவு வாரியாக நகரங்களை பிரித்து பணியாளர்களை நியமிக்க அமேசான் திட்டம் வகுத்துள்ளது.
Advertisement
Advertisement
விழாக்காலத்தையொட்டி நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ பணி வாய்ப்பை அமேசான் ஏற்படுத்தவுள்ளது. வாரணாசி, கொச்சி, ஜலந்தர், காஸியாபாத், ராஞ்சி, கோரக்பூர் உள்ளிட்ட நகரங்களில் பணி வாய்ப்புகளை ஏற்படுத்தவுள்ளது.
இப்பணி வாய்ப்பு ஆயிரக்கணக்கான பெண்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கும் வழங்கப்படவுள்ளதாக அமேசான் தெரிவித்துள்ளது.
Amazon is hiring 160,000 temporary workers across 400 cities in India
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.