சிட்டி யூனியன் வங்கியின் புதிய டிஜிட்டல் பேமென்ட் முறைகள் அறிமுகம்!
சிட்டி யூனியன் வங்கியின் புதிய டிஜிட்டல் பேமென்ட் முறைகள் அறிமுகம் பற்றி...
சிட்டி யூனியன் வங்கி, மும்பையில் செப். 9 முதல் 11 வரை நடைபெற்ற குளோபல் ஃபின்டெக் ஃபெஸ்ட் 2026-ல், அடுத்த தலைமுறை பணம் செலுத்தும் 11 முறைகளை அறிமுகப்படுத்தியதுடன், டிஜிட்டல் வங்கி செயல்பாடுகளுக்கான தீர்வுகளையும் வழங்கியுள்ளது.
டேப் அண்ட் பே (Tap and Pay), யுபிஐ ஹெல்ப் 2.0 - மையுபிஐ, பயோமெட்ரிக் அங்கீகாரத்திற்கான ரூபே பாஸ்கீ (Rupay passkey), ஃபாஸ்டேக் ஸ்டிக்கரை மாற்றாமல் வேறு வங்கிக்கணக்கில் உள்ள ஃபாஸ்டேக் கணக்கை, சிட்டி யூனியன் வங்கிக் கணக்கிற்கு மாற்றும் ஃபாஸ்டேக் போர்ட்டபிலிட்டி (Fastag Portability) ஆகியவை இதில் அடங்கும்.
மேலும் சிட்டி யூனியன் வங்கி, பிரீமியம் ரூபே கிரெடிட் கார்டான 'சியுபி ஸ்ரேஷ்டா', வணிகம் மற்றும் டிஜிட்டல் தளங்கள் பயன்பாடுகளில் யுபிஐ பணபரிவர்த்தனைகளை ஒருங்கிணைக்க உதவும் 'பேப்ரோ எஸ்டிகே' (PayPro SDK) ஆகியவற்றையும் அறிமுகப்படுத்தியது.
Advertisement
Advertisement
37 நாடுகளின் நாணயங்களை ஆதரிக்கும் செய்யறிவு மூலம் இயங்கும் பயண அட்டை, டெபிட், கிரெடிட் என அனைத்துக்கும் ஒரே கார்டு முறையான 'மாஸ்டர்கார்டு ஒன் கிரெடென்ஷியல்', மோசடிகளைத் தடுக்கும் வழிகள் ஆகியவற்றையும் அறிமுகப்படுத்தியுள்ளது.
City Union Bank has unveiled 11 next-generation payment and digital banking solutions
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.