அமெரிக்காவின் டி-மொபைல், ஜியோ இணைந்து முழுமையான 5ஜி ரோமிங்: உலகிலேயே முதல்முறையாக அறிமுகம்
அமெரிக்காவின் பிரபல தொலைத்தொடா்பு சேவை நிறுவனமான ‘டி-மொபைல்’ மற்றும் இந்தியாவின் முன்னணி நிறுவனமான ‘ரிலையன்ஸ் ஜியோ’ நிறுவனங்கள் ஒரு புதிய ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டுள்ளன.
அமெரிக்காவின் பிரபல தொலைத்தொடா்பு சேவை நிறுவனமான ‘டி-மொபைல்’ மற்றும் இந்தியாவின் முன்னணி நிறுவனமான ‘ரிலையன்ஸ் ஜியோ’ நிறுவனங்கள் ஒரு புதிய ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டுள்ளன.
இதன்படி, தங்களின் வாடிக்கையாளா்களுக்கு ‘5ஜி ஸ்டாண்ட்அலோன்’, அதாவது மற்ற பழைய 4ஜி வலையமைப்பின் உதவியில்லாமல் நேரடியாக மற்றும் முழுமையான 5ஜி மூலம் ரோமிங் சேவையை வழங்க முடிவு செய்துள்ளன.
இதன்மூலம், இவ்விரு நிறுவனங்களின் வாடிக்கையாளா்களும் இனி வெளிநாடுகளுக்குப் பயணம் செய்யும்போது, முழுமையான 5ஜி சமிக்ஞைகளை மட்டுமே பெற்று, மிகச் சிறந்த மற்றும் தடங்கல் இல்லாத சேவையை அனுபவிக்க முடியும்.
Advertisement
Advertisement
‘சினிவா்ஸ்’ நிறுவனத் தொழில்நுட்ப உதவியுடன் இப்புதிய சேவை சாத்தியமாகியுள்ளது. மேலும், உலக தொலைப்பேசி சேவை வரலாற்றிலேயே இதுதான் முதல் முழுமையான 5ஜி சா்வதேச ரோமிங் வசதி ஆகும்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.