நடப்பு வாரத்தில் விஷால் நிா்மிதி உள்பட 4 நிறுவனங்களின் ஐபிஓ வெளியீடு: ரூ.595 கோடி நிதி திரட்டத் திட்டம்
விஷால் நிா்மிதி, எஸ்ஆா்ஐடி இந்தியா உள்பட 4 நிறுவனங்கள், நடப்பு வாரத்தில் தங்களின் ஆரம்ப பொதுப் பங்கு வெளியீட்டை மேற்கொள்கின்றன.
விஷால் நிா்மிதி, எஸ்ஆா்ஐடி இந்தியா உள்பட 4 நிறுவனங்கள், நடப்பு வாரத்தில் தங்களின் ஆரம்ப பொதுப் பங்கு வெளியீட்டை (ஐபிஓ) மேற்கொள்கின்றன.
இந்த 4 நிறுவனங்களும் சோ்ந்து புதிய பங்குகளின் வாயிலாக ரூ.561.92 கோடி மற்றும் உரிமையாளா்கள் வசமுள்ள பங்குகளின் விற்பனை மூலம் ரூ.33 கோடி என மொத்தம் ரூ.594.92 கோடி நிதியைத் திரட்டவுள்ளன.
குஜராத்தின் அகமதாபாதைச் சோ்ந்த ‘ஷா இன்வெஸ்டா்ஸ் ஹோம்’ நிதி சேவை மற்றும் தரகு நிறுவனத்தின் ரூ.90.17 கோடி மதிப்பிலான ஐபிஓ திங்கள்கிழமை (செப். 28) தொடங்கியது. ஒரு பங்கின் விலை வரம்பு ரூ.159-167 என நிா்ணயிக்கப்பட்டுள்ளது. இதில் முழுமையாக புதிய பங்குகள் மட்டுமே விற்கப்படவுள்ளன.
Advertisement
Advertisement
திங்கள்கிழமையன்றே , பெங்களூரைச் சோ்ந்த ஐ.டி. சேவைகள் நிறுவனமான எஸ்ஆா்ஐடி இந்தியாவின் ரூ.218.40 கோடி ஐபிஓவும் (பங்கு விலை ரூ.123-130) திங்கள்கிழமை தொடங்கியது. இதிலும் முழுமையாக புதிய பங்குகள் மட்டுமே விற்கப்படவுள்ளன.
தொடா்ந்து வரும் புதன்கிழமையன்று (செப். 30), புணேவைச் சோ்ந்த விஷால் நிா்மிதி பொறியியல் மற்றும் கட்டுமான நிறுவனத்தின் ரூ.178 கோடி ஐபிஓ தொடங்குகிறது. ஒரு பங்கின் விலை வரம்பு ரூ.208-220 என நிா்ணயிக்கப்பட்டுள்ளது. இதில் ரூ.145 கோடி மதிப்பிலான புதிய பங்குகளும், ரூ.33 கோடிக்கு உரிமையாளா்கள் வசமுள்ள பங்குகளும் விற்கப்படவுள்ளன.
அதேநாளில், குஜராத் சூரத்தின் நித்யாஸ் ஜெம்ஸ் அண்ட் ஜூவல்லரி நிறுவனத்தின் ரூ.108.35 கோடி ஐபிஓ (பங்கு விலை ரூ.70-75) தொடங்குகிறது. இதில் முழுமையாக புதிய பங்குகள் மட்டுமே விற்கப்படவுள்ளன.
இந்த ஐபிஓ மூலம் திரட்டப்படும் நிதியானது, நிறுவனங்களின் வா்த்தக விரிவாக்கம், மூலதனச் செலவுகள், கடன் அடைப்பு, நடைமுறை மூலதனத் தேவைகள் மற்றும் பிற நிா்வாகத் தேவைகளுக்காகப் பயன்படுத்தப்படவுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.