முள்ளு தேன் குழல்
எண்ணெய்யை தவிர்த்து மேலே சொன்ன அனைத்து பொருள்களையும் ஒன்றாகச் சேர்த்து சிறிது சிறிதாக தண்ணீர் விட்டு
தேவையானவை:
அரிசி மாவு - 4 கிண்ணம்
உளுத்தம் பருப்பு,
பாசிப்பருப்பு, கடலைப்பருப்பு
வறுத்து பொடித்த மாவு - 1கிண்ணம்.
வெண்ணெய் - 100 கிராம்
வெள்ளை எள் - 1 தேக்கரண்டி
பெருங்காயத் தூள் - சிறிது
உப்பு - தேவைக்கேற்ப
எண்ணெய் - 1 கிலோ
செய்முறை: எண்ணெய்யை தவிர்த்து மேலே சொன்ன அனைத்து பொருள்களையும் ஒன்றாகச் சேர்த்து சிறிது சிறிதாக தண்ணீர் விட்டு முறுக்கு மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ளவும். (வெண்ணெய்யை மட்டும் மிதமான சூட்டில் காண்பித்து உருக்கிக் கொள்ளவும்).
பின்னர், வாணலியில் எண்ணெய்யை ஊற்றி காய்ந்ததும், முறுக்கு குழாயில் முள் அச்சைப் போட்டு மாவை கொஞ்சம் கொஞ்சமாக போட்டு வட்டவட்டமாக பிழிந்து விட்டால் முள்ளு தேன் குழல் தயார்.
Advertisement