மாமியார் நாள் கொண்டாடுகிறோமே... மாமனார் நாள் என்று இருக்கிறதா?
மாமியார் நாள் கொண்டாடவிருக்கும் நிலையில் மாமனார் நாள் என்று இருக்கிறதா? என்பது பற்றி..
உலக மாமியார் நாள் ஒவ்வொரு ஆண்டும் அக்.25ஆம் தேதி கொண்டாடப்பட்டு வருகிறது. அதுபோலவே மாமனார் நாள் என்பதும் உலகின் பல நாடுகளில் கொண்டாடப்பட்டு வருகிறதாம்.
வரும் 25ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை மாமியார் நாள் கொண்டாடப்படுகிறது. ஒவ்வொரு வீட்டிலும் பல்வேறு விவகாரங்களையும் சமநிலைப்படுத்தி, குடும்ப உறவுகள், பொருளாதாரம், செய்ய வேண்டிய பொறுப்புகள் என அனைத்தையும் தூக்கி சுமக்கும் பொறுப்பு அந்த வீட்டின் குடும்பத் தலைவியையே சென்று சேரும். அதேவேளையில், ஒரு தாயாக இருப்பவர், தன் மகனுக்கோ மகளுக்கோ திருமணம் செய்து, அவர்களது வாழ்க்கைத்துணைக்கு மாமியார் ஆகும்போது அவர்களது பொறுப்பு இன்னும் கூடுதலாகும், மருமகன் அல்லது மருமகளை வீட்டின் ஒரு அங்கமாக்கி, அவரது விருப்பு வெறுப்புகளையும், குடும்பத்தின் பழக்க வழக்கங்களையும் ஒரே பாதையில் பயணிக்க வைக்கும் அந்த அழகிய கலையை பெண்களே பெரும்பாலும் கற்றறிந்தவர்களாக இருக்கிறார்கள்.
எனவே, ஒரு சிறு குடும்பமோ, கூட்டுக் குடும்பமோ, மகிழ்ச்சியாக இருக்க, மகனையும் மகளையும் ஒற்றுமையாக வாழ்வதற்கு பின்னாளிருந்து உந்துதலைக் கொடுக்கும் மாமியாரும் போற்றப்பட வேண்டியவர்கள்தான். ஆனால் என்ன அவசர யுகத்தில் புரிந்துகொள்ள மறந்து நேரமின்றி, பொதுவாக மாமியார் என்றாலே ஏதோ எதிராளி போல பாவிக்கும் பழக்கம் ஏற்பட்டிருந்தது.
Advertisement
Advertisement
ஆனால், தற்போது மாமியார்களும், தங்களது மருமகள், மருமகனை நண்பர்களைப் போல எண்ணும் வழக்கமும் அதிகரித்து வருகிறது. ஒருவரைப் பார்த்து மற்றவர்களும் இதுபோல மாறி வரும்போக்கினால் தற்போது அன்னையர்கள் நாள் போலவே மாமியார்கள் நாளும் கொண்டாடப்பட்டு வருகிறது.
சரி மாமியார் நாள் கொண்டாட திட்டமிடும்போது, அந்த வீட்டின் குடும்பத் தலைவர், மாமனாருக்கு எல்லாம் கொண்டாட்டங்கள் இல்லையா என்று கேட்டுவிட்டால்?
இல்லை என்றோ தெரியாது என்றோ சொல்லிவிட முடியாதல்லவா. மாமனார் நாளும் கொண்டாடப்படுகிறது. மாமனார் நாள் என்பது ஒவ்வொரு ஆண்டும் ஜூலை மாதம் 30-ஆம் தேதி கொண்டாடப்பட்டு வருகிறது. குடும்பத்தின் மகிழ்ச்சிக்காக உழைக்கும் குடும்பத்தின் தலைவரை, தன் வாழ்க்கைத் துணையின் தந்தையைக் கொண்டாடுவதற்காக ஒரு நாள் உருவாக்கப்பட்டிருக்கிறது என்றால் அதில் தவறேயில்லை எனலாம்.
ஒருவேளை, மாமியார் நாளைக் கொண்டாடடும்போது யாராவது இந்தக் கேள்வியை எழுப்பினால் பதில் சொல்வதற்கு வசதியாகவே இந்த தகவல்.
With 'Mother-in-Law Day' coming up, one might wonder—is there a 'Father-in-Law Day' as well?
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.