FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

சந்திரபாபுவுக்குப் பின்னணி பாடியவர்கள்!

சொந்தக் குரலில் பாடி, நடித்து, நடனமாடியவர் சந்திரபாபு. அவருக்குக் கூட மூன்று பின்னணிப் பாடகர்கள் பின்னணி பாடியிருக்கிறார்கள்.

30 ஜனவரி 2024, 9:56 pm
பகிர்:

சொந்தக் குரலில் பாடி, நடித்து, நடனமாடியவர் சந்திரபாபு. அவருக்குக் கூட மூன்று பின்னணிப் பாடகர்கள் பின்னணி பாடியிருக்கிறார்கள். "ஆசைக்கிளியே கோபமா' ( சீர்காழி - சபாஷ்மீனா), "மயிலைக் கண்டால் லைலா' (டி.எம். எஸ். - அன்னை), "சுகமெதிலே இதயத்திலா' (ஜேசுதாஸ் - பறக்கும் பாவை) இதைவிட விசேஷமான தகவல், சந்திரபாபு வேறு இரண்டு நடிகர்களுக்குப் பின்னணி பாடியிருக்கிறார் என்பது. ஒருவர் வீணை எஸ். பாலசந்தர் என்று பின்னாளில் பிரபலம் அடைந்த எஸ். பாலசந்தர், "உல்லாசமாகவே உலகத்தில் வாழவே' (பெண்) சந்திரபாபு பின்னணி பாடிய - அந்த மனிதர் - நம்மாலே ஊகிக்கவே முடியாத நடிகர். ஆம்! சிவாஜி கணேசன்.
 "கல்யாணம் பண்ணியும் பிரமச்சாரி' படத்தில் "ஜாலி லைஃப் ஜாலி லைஃப் தாலிகட்டினா ஜாலி லைஃப்' என்று சிவாஜி கணேசனுக்காகப் பாடி சாதனை படைத்தார் சந்திரபாபு. சிவாஜியின் குரலான டி.எம். சௌந்தரராஜன் " அன்னை' படத்தில் சந்திரபாபுவுக்குப் பின்னணி பாடிக் கணக்கை சரி செய்து கொண்டார்.
 - தங்க.சங்கரபாண்டியன், சென்னை.
 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments