தலையை அசைத்தால் இருப்பில் பணம் காலி
சந்தைக்குச் செல்லும்போது பணத்தை பாதுகாப்பாகக் கொண்டு சென்று பொருள்களை வாங்கி வருவதே நமது முன்னோர்களுக்குப் பெரும் சவாலாக
சந்தைக்குச் செல்லும்போது பணத்தை பாதுகாப்பாகக் கொண்டு சென்று பொருள்களை வாங்கி வருவதே நமது முன்னோர்களுக்குப் பெரும் சவாலாக இருந்தது. காரணம் வழிப்பறி. அது இப்போதும் தொடரத்தான் செய்கிறது.
தொழில்நுட்பத்தால் எதுவும் சாத்தியம் என்று கூறிவரும்போது மேற்சொன்ன பிரச்னைகளைத் தீர்க்க அது பயன்படாதா என்ன? அதற்குப் புதிய தீர்வு ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது கூகுள் தேடுதல் இணையதளம். இந்த நிறுவனத்தின் புதிய கூகுள் கிளாஸ் (கண்கண்ணாடி) மூலம் பணப்பரிமாற்றம் இப்போது சாத்தியமாகியுள்ளது.
ஆம், அதற்கு "ஈஸ்' எனும் புதிய பயன்பாட்டுத் தளத்தை (அப்ளிகேஷன்) கூகுள் உருவாக்கியுள்ளது. இந்த அப்ளிகேஷனை பதிவிறக்கம் செய்து, அதனை நமது பிட்காய்ன் (டிஜிட்டல் கரன்ஸி) அக்கவுண்ட்டுடன் இணைக்க வேண்டும்.
Advertisement
Advertisement
இந்த பரிமாற்றத்தை வெற்றிகரமாக்க பாதுகாப்பு அம்சங்களை பயன்பாட்டாளர் நிறைவேற்ற வேண்டும். ஈஸ் தளத்தில் நமது குரல் மாதிரியை பதிவு செய்வது அத்தியாவசியமானது. பின்னர், கடையில் பொருளில் உள்ள க்யூஆர் கோடை கண் கண்ணாடியின் கேமராவின் மூலம் ஸ்கேன் செய்து கொள்ள வேண்டும். சரி என்று தலையாட்டினாலே அல்லது நமது சம்மதத்தைத் தெரிவித்தாலே போதும், பிட்காயின் அக்கவுண்ட் மூலம் பணம் செலுத்தப்பட்டு விடும். பொருள் நமது வீடு வந்து சேர்ந்து விடும். கையில் பணம் ஏதுமின்றி எளிதாகப் பொருள்களை வாங்கி விட முடியும்.
அதற்கு அந்தக் கடையில் பிட்காய்ன் ஏற்றுக் கொள்ளப்பட வேண்டும். அதை விசாரித்து விட்டு, கையில் பணம் எடுத்துச் செல்வதா, வேண்டாமா என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள்.
பிட்காய்னுக்குப் பதிலாக பரவலாகப் பயன்படுத்தப்பட்டு வரும் டாலர், யூரோ ஆகிய நாணயங்களையும் இந்த கண் கண்ணாடி வர்த்தக பரிமாற்றத்துக்குப் பயன்படுத்த கூகுள் ஆலோசித்து வருகிறது.
இந்த பரிமாற்றத்தில் வழிப்பறி இல்லையென்றாலும், கண்ணாடி திருடுபோகாமல் பார்த்துக் கொள்வதும் முக்கியமானதுதான்.
கண் கண்ணாடியைத் தவிர, ஸ்மார்ட் வாட்ச், பிரேஸ்லெட், மோதிரம் உள்ளிட்டவற்றிலும் இந்த புதியவகை பண பரிமாற்றத்தை அமல்படுத்த கூகுள் திட்டமிட்டு வருகிறது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.