பிரண்டைத் துவையல்
முதலில் வாணலியில் எண்ணெய் ஊற்றி சுத்தம் செய்து வைத்துள்ள பிரண்டைத் துண்டுகளைப் போட்டு நன்றாக வதக்க வேண்டும்.
தேவையான பொருள்கள்:
நறுக்கிய பிரண்டைத் துண்டுகள்- 1 கிண்ணம்
காய்ந்த மிளகாய்- 4
புளி- சிறிதளவு
பெருங்காயப் பொடி- கால் தேக்கரண்டி
பூண்டு- 3 பல்
எண்ணெய்- 2 தேக்கரண்டி
உப்பு- தேவையான உப்பு
தாளிக்க: கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை.
செய்முறை:
Advertisement
Advertisement
முதலில் வாணலியில் எண்ணெய் ஊற்றி சுத்தம் செய்து வைத்துள்ள பிரண்டைத் துண்டுகளைப் போட்டு நன்றாக வதக்க வேண்டும். பின்னர் காய்ந்த மிளகாய், பூண்டு போட்டு வறுத்து ஆறியவுடன் இவை அனைத்தையும் மிக்ஸியால் போட்டு உப்பு சேர்த்து அரைக்க வேண்டும். பின்பு, கடுகு, உளுத்தம் பருப்பு, எண்ணெய் சேர்த்து தாளித்து நன்றாக வதக்கி இறக்கவும்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.