சர்க்கஸ்
சர்க்கஸும் ஒரு கலைதான். ஆனால், அதற்கு இந்திய அரசின் கல்சுரல் இலாகாவின் ஆதரவு கிடைக்கவில்லை. இதனால் சர்க்கஸ் மூடப்பட்டு, கலைஞர்கள் வேலையை இழந்தால், அவர்களேதான் மாற்று வேலை தேட வேண்டிவரும்.
இந்தியாவில் 300-க்கும் அதிகமான சர்க்கஸ்கள் 1990-களில் இருந்தன. ஆனால், இன்றோ அவற்றின் எண்ணிக்கை வெறும் 30-ஆகக் குறைந்துவிட்டது.
இதற்கு அடிப்படைக் காரணம் இரண்டு. ஒன்று - மிருகங்களை சர்க்கஸில் கொடுமைப்படுத்துகிறார்கள் என மிருகவதைத் தடுப்பாளர்கள் நீதிமன்றங்களை நாடி வழக்குத் தொடர்ந்து, அவற்றைப் பயன்படுத்துவதை அநேகமாக முடக்கிவிட்டனர்.
இரண்டாவது - சர்க்கஸில் குழந்தைகளின் செயல்பாடுகளைத் தடை செய்ய வேண்டும் என்பதாகும். உண்மையில் சர்க்கஸில் உள்ள குழந்தைகள் அங்குள்ள கலைஞர்களின் குழந்தைகளே! அந்தக் குழந்தைகள் பெற்றோருடன் இருப்பதால், அவர்களுக்குக் கல்வி அளிக்க, பெரும்பாலான சர்க்கஸ்களில் ஆசிரியர்களும் உண்டு. குழந்தைகளுக்கு 12 வயதிலிருந்து அவர்கள் விரும்பினால் பயிற்சியளித்து பயன்படுத்திக் கொள்கிறார்கள்.
இருந்தாலும் மேற்குறிப்பிட்ட இரண்டும் சர்க்கஸ் வளர்ச்சியை அநேகமாக முடக்கிவிட்டன.
இனி சர்க்கஸின் ஆரம்பம் பற்றிப் பார்ப்போம்.
சர்க்கஸ்... இத்தாலிய "சர்க்கஸ்' என்ற வார்த்தையிலிருந்து வந்தது.
சர்க்கஸ் உலகின் தந்தை எனக் கருதப்படுபவர் பிலிப் ஆஸ்லி. (இங்கிலாந்து) இவர் 1768-ஆம் ஆண்டிலேயே சிறிய சர்க்கஸ் நிகழ்ச்சிகளை நடத்த ஆரம்பித்தார்.
இதில் தனிமனித சாகசங்கள், குதிரை சாகசங்கள் நடத்திக் காட்டப்பட்டன. இந்த பாணி சுமார் 50 வருடங்களுக்குத் தொடர்ந்தது.
இதன் பிறகு 18,19-ஆம் நூற்றாண்டுகளில் மரப் பலகைகளால் ஓர் அரங்க அமைப்பை உருவாக்கி, அதனுள் பார்வையாளர்கள் உட்கார வசதி செய்து நடுவில் சாகசங்கள் நடத்திக் காட்டப்பட்டு வந்தன.
இன்று சர்க்கஸ் டென்ட், தியேட்டர், காசினோக்களில் நடத்தப்படுகின்றன.
முன்பெல்லாம் சர்க்கஸ் 13 மீட்டர் (42 அடி) வளையத்துக்குள் நடக்கும். இதுவும் பிலிப் ஆஸ்லியால் அமைக்கப்பட்டதுதான்.
ரோமானியர்களின் சர்க்கஸ் கூடாரங்கள் செவ்வகம் அல்லது அரை வட்டமாக அமைக்கப்பட்டன.
ரோமில் ஆரம்பிக்கப்பட்ட முதல் சர்க்கஸின் பெயர் "மேக்சிமஸ்'.
ரோமானிய மன்னன் நீரோவுக்கு சர்க்கஸ் மீது மிகுந்த அபிமானம் உண்டு. அதனால் சர்க்கஸ் குழுவை ஆரம்பித்து, ஆதரித்து வந்தார்.
ரிக்கெட்ஸ் என்ற ஆங்கிலேயர்தான், முதல் அமெரிக்க சர்க்கûஸ 1793-இல் துவக்கியவர். இந்த சர்க்கûஸ ஜனாதிபதி ஜார்ஜ் வாஷிங்டனே அமர்ந்து பார்த்ததாகக் கூறுகிறார்கள்.
இன்று நாம் காணும் சர்க்கஸ் காட்சிகள் அனைத்துக்கும் தாயகம் அமெரிக்காதான்!
1838 - 40 வாக்கில்தான் சர்க்கஸ், ஊர் ஊராகச் சென்று நடத்தும் வகையில் தனது பயணத்தைத் துவக்கியது.
இங்கிலாந்தின் பல நகரங்களுக்கும் அமெரிக்க சர்க்கஸ் சென்று, காட்சிகளை நடத்தியது.
பிறகு லத்தீன் அமெரிக்கா, ஆஸ்திரேலியா, தென்கிழக்கு ஆசியா, சீனா, தென்னாப்பிரிக்க நாடுகளுக்கும் தனது பயணத்தைத் தொடர்ந்தது.
இந்தக் காலகட்டத்தில்தான் சீனாவின் மார்ஷியல் ஆர்ட்ஸ் (குங்ஃபூ மற்றும் கராத்தே) கலைகள் சர்க்கஸில் இடம்பெற ஆரம்பித்தன. குறிப்பாக 1866-இல்தான் ஐரோப்பிய சர்க்கஸ்களில் அவை இடம்பெற்றன.
உலகின் மிகப்பெரிய சர்க்கஸ், "ஆஹழ்ய்ன்ம் & ஆஹண்ப்ங்ஹ்' என அறிமுகம் செய்யப்பட்டு 1897 முதல் 1920 வரை ஐரோப்பாவை வலம் வந்தது.
ரஷ்யா 1927-ஆம் ஆண்டுகளில் சர்க்கஸில் இறங்கியது. "மாஸ்கோ ஸ்டேட் சர்க்கஸ்' மிக பிரமாண்ட அளவில் துவக்கப்பட்டு 1950-ஆம் ஆண்டிலிருந்து சர்வ
தேசப் பயணம் செய்து அமெரிக்க, ஐரோப்பிய சர்க்கஸ்களுக்கு சவால் விட்டது!
இதேபோல, சீனாவும் "சைனா ஸ்டேட் சர்க்கஸ்' என ஒன்றைத் துவக்கி, அதில் தன்னுடைய மார்ஷியல் கலைகளுக்கு முதன்மை அளித்து அசத்தியது.
1974-இல் மாண்டி கார்லோ நகரில் உலக சர்க்கஸ் விழா நடந்தது. இதில்தான் முதன்முதலாக சர்க்கஸ் கலைஞர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன. ஆனால், டெலிவிஷன் வந்ததும் சர்க்கஸின் புகழ் மங்க ஆரம்பித்தது.
இரண்டாம் உலகப் போருக்குப் பின் சர்க்கஸ்களில், ஏதாவது ஒரு தீம் (கருப்பொருள்),
கதை, ஆட்டம் பாட்டம் என மாறுபட்ட பாணியில் ஆஸ்திரேலியா, கனடா, பிரான்ஸ், அமெரிக்காவின் மேற்குக் கரைப்பகுதி, பிரிட்டன் ஆகியவற்றில் பிரபலமானது. இது 1970 வரை தொடர்ந்தது.
இதில் மிகவும் பிரபலமானது கனடாவின் "இண்ழ்வ்ன்ங் ஈன் நர்ப்ங்ண்ப்' என்ற நிறுவனம். இது 200 நகரங்களில் 90 மில்லியன் பார்வையாளர்கள் முன்னிலையில் இந்த தீம் சர்க்கஸ்களை நடத்தி 810 மில்லியன் டாலருக்கும் அதிகமாய் சம்பாதித்தது.
டென்மார்க் மற்றும் ஸ்வீடனின் ஸ்டாக்ஹோமிலும் நிரந்தர சர்க்கஸ் கூடாரங்கள் இன்றும் உள்ளன.
ஒரு சர்க்கஸில் பொதுவாக 100 பேர் இருப்பர். இதில் பாதிக்கும் குறைவாகக் கலைஞர்களும், மற்றவர்கள் உதவி செய்யும் ஊழியர்களாகவும் இருப்பர்.
ஜோசப் கிரிமால்டி என்பவர்தான் உலகின் முதல் சர்க்கஸ் கோமாளி. 3 வயதில் தொழிலில் நுழைந்த அவர் 50 வருடங்கள் தொடர்ந்து கோமாளித்தனங்கள் செய்து மிகவும் பிரபலமாக இருந்தார்.
இந்தக் கோமாளிகளில் வெள்ளைக் கோமாளி, சிகப்பு கோமாளி, கேரக்டர் கோமாளி என பலர் உண்டு.
வெள்ளைக் கோமாளி பல பயிற்சிகள் செய்து, சாகசங்களைத் தன்னிச்சையாகச் செய்பவர்.
சிகப்பு கோமாளி மற்ற கலைஞர்களுடன் இணைந்து வந்து திடீர் கோமாளித்தனங்களைச் செய்து சிரிப்பு மூட்டுவார்.
கேரக்டர் கோமாளி ரொட்டி தயாரிப்பவர், போலீஸ்காரர், மனைவி மற்றும் பல நபர்களைக் கிண்டலடித்து அவர்களைப்போல் நடித்து சிரிப்பு மூட்டுவார்.
இவர்களுக்கென தனி மேக்கப் கலைஞர்கள் உண்டு.
சர்க்கஸும் ஒரு கலைதான். ஆனால், அதற்கு இந்திய அரசின் கல்சுரல் இலாகாவின் ஆதரவு கிடைக்கவில்லை. இதனால் சர்க்கஸ் மூடப்பட்டு, கலைஞர்கள் வேலையை இழந்தால், அவர்களேதான் மாற்று வேலை தேட வேண்டிவரும். நஷ்ட ஈடும் கிடையாது!
இன்று இந்தியாவில் உள்ள பிரபலமான சில சர்க்கஸ்கள்:
1. கோகினூர் சர்க்கஸ், 2. ஜம்போ சர்க்கஸ், 3. ஜெமினி சர்க்கஸ், 4. ரம்போ சர்க்கஸ், 5. நடராஜ் சர்க்கஸ்.
மேலும் பல சர்க்கஸ்களும், குறிப்பிட்ட எல்லைகளுக்குள் பிரபலமாக உள்ளன.
உங்கள் ஊரில் சர்க்கஸ் டென்ட் அடித்துள்ளதா? தயவு
செய்து அங்கு சென்று, பணம் கொடுத்துப் பார்த்து
அந்தக் கலைஞர்களுக்கு வாழ்வளியுங்கள்!