FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

ஒற்றுமை!

கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன், மனக்கசப்பு காரணமாக எம்.கே.தியாகராஜ பாகவதரிடம்(அந்த நாள் ஹீரோவாக்கும்!)

9 ஜனவரி 2024, 12:19 pm
பகிர்:

கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன், மனக்கசப்பு காரணமாக எம்.கே.தியாகராஜ பாகவதரிடம்(அந்த நாள் ஹீரோவாக்கும்!)

 பேசுவதில்லையென்று ஒரு "வதந்தி' உருவாகியிருந்தது! இதை அறிந்த கலைவாணர் ஓர் உபாயம் செய்தார். கலைவாணர் இல்ல விழா ஒன்றுக்கு எம்.கே.டி. வந்து கலந்து கொள்ளும் நிலை ஏற்பட்டது! அதை பயன்படுத்திக் கொண்ட என்.எஸ்.கே,  அங்கு வந்திருந்த பத்திரிகையாளர்களைக் கூப்பிட்டு, ""இதோ பாருங்கள்! நாங்க ஒற்றுமையாகவே இருக்கிறோம்! ஏன் தெரியுமா? என் மனைவி "மதுரம்'...ங..., நான் கிருஷ்ணன்...ஓ..., தியாகராஜ பாகவதர்...ப...! பார்த்தீர்களா...,ஒற்றுமையை!'' என்றதும் அனைவரும் சிரித்து கரகோஷம் செய்தனர்!

கே.என்.பாலகிருஷ்ணன்,

Advertisement

Advertisement

கும்பகோணம்.    

சரியான நேரம்!

தத்துவ ஞானி டயோஜினியிடம் ஒருவர் சாப்பிடுவதற்கு சரியான நேரம் எது என்று கேட்டார். அவர் "நீங்கள் ஒரு பணக்காரராக இருந்தால் விரும்பும்போதெல்லாம் சாப்பிடலாம். ஏழையாக இருந்தால் சாப்பாடு கிடைக்கும்போது சாப்பிடலாம்' என்றார்.

சரஸ்வதி பஞ்சு, திருச்சி.

முதுமையிலும் இளமை!

நோபல் பரிசு பெற்ற ஆல்பர்ட் சுவைட்சர் சிறந்த சிந்தனையாளர். சுயதொழில் செய்யும் ஒருவர் அவரிடம், ""எனக்கு வயதாகிவிட்டது. வேலை செய்ய முடியவில்லை'' என்றார்.

 ""என்னோடு வந்து வேலை செய்யுங்கள். உங்களை இளமையாக்கிக் காட்டுகிறேன்'' என்றார் சுவைட்சர். அப்போது சுவைட்சருக்கு வயது 74.

நெ.இராமன், சென்னை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments